கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வனிதா...இது தான் காரணமா ?

சென்னை : கண்ணீர் விட்டு அழுதபடி பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா விஜயக்குமார் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. வனிதா வெளியேறிய எபிசோட் இன்று ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம். இதற்கு என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி உள்ள நிலையில், வனிதா வெளியேறியதற்கு என்ன காரணம் என்பது பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் துவங்கி மூன்று வாரங்கள் ஆகிய உள்ள நிலையில் முதல் இரண்டு வாரங்களில் கெத்த காட்டி வந்த வனிதா, மூன்றாவது வாரத்தில் கண்ணீர் விட்டு அழுது வருகிறார். என்னை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் என பிக்பாசிடமே கன்ஃபஷன் ரூமிற்குள் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்த பிக்பாஸ் முயற்சித்தும் வனிதா பிடிவாதமாக இருந்து விட்டார்.

வனிதாவை மிரட்டிய பிக்பாஸ்

வனிதாவை மிரட்டிய பிக்பாஸ்

நேற்றிரவு கண்ணீர் விட்டு அழுத வனிதாவை அக்ரிமெண்ட் குறித்து பேசி பிக்பாஸ் லைட்டாக மிரட்ட அதையெல்லாம் என் வக்கீலை வைத்து பார்த்துக்கொள்வேன் என திருப்பி வனிதா கோபமாக கூறி என்னை அனுப்பியே ஆகவேண்டும் என்று சொல்ல காலை வரை யோசிக்க பிக்பாஸ் டைம் கொடுத்துள்ளார். இது பற்றி இன்று காலை சினேகன், தாடி பாலாஜியிடம் விளக்கமாக கூறிக் கொண்டிருந்தார்.

இப்படி அவமானப்பட வேண்டியதில்லை

இப்படி அவமானப்பட வேண்டியதில்லை

காலையில் பேசிய சினேகன் அவர் வெளியேறுவது உறுதி என்று கூறுகிறார். அக்ரிமெண்டுக்காக நானும் டாஸ்க் செய்வேன், ஆனால் பெயர் வாங்கிய நாங்கள் இப்படி எல்லாம் அவமானப்பட வேண்டியதில்லை என்கிறார். இதேபோல் தாடி பாலாஜியும் வெளியில் போகும் எண்ணத்தில் பிக்பாஸிடம் பேச கேட்டார்.ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்கிறார். அனிதாவும், இடியே விழுந்தாலும் கலங்காதவர் ஒன்றுமே இல்லாததற்காக எதற்கு வீட்டிற்கு போக வேண்டும் என்கிறார்.

அப்பா-அம்மாவையே தூக்கி போட்டவர்

அப்பா-அம்மாவையே தூக்கி போட்டவர்

அதற்கு பதில் கூறும் சினேகன், அம்மா-அப்பாவையே தூக்கி எறிந்தவர். இதெல்லாம் சர்வ சாதாரணம். வீட்டில் இருந்து யாரையோ வர சொல்லி இருக்கிறாராம். வந்ததும் கிளம்புவார் அல்லது வீட்டில் உள்ள யாருடவோ பேச வேண்டும் என கேட்டுள்ளாராம். சிலர் இனி தான் வாழ்க்கையை துவங்க போகிறார்கள். ஆனால் நாம் ஏற்கனவே வாழ்க்கையை துவக்கி விட்டோம். இதுவரை பெற்றதை, வெளியில் போய் இழந்து விடக் கூடாது. அதை யோசித்து தான் நான் அமைதியாக இருக்கிறேன் என கூறுகிறார். இதை கேட்ட அனிதா, அப்படி என்றால் எல்லோருமே வீட்டில் உள்ளவர்களிடம் பேச இப்படி பண்ணலாமே என்கிறார்.

Recommended Video

Husband, Wife எப்படி இருக்கணும்? | Vanitha Vijayakumar Speech | Oneindia Tamil
இதுதான் காரணமா

இதுதான் காரணமா

இவர்கள் அனைவரும் கமல்ஹாசன் இல்லை என்பதால் மனம் உடைந்து புதிய நபரை எதிர்கொள்ள முடியாமல் வெளியேற முடிவு செய்துள்ளார்களா? ரம்யா கிருஷ்ணன் வரப்போகிறாரா என்ற எண்ணமாக கூட இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் விவாதிக்கின்றனர். ஆனால் கமல் இல்லாவிட்டால் ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்குவார் என கணித்து தான், அவரை சமாளிக்க வேண்டும் என தயங்கி தான் வனிதா வெளியேற முடிவு செய்திருப்பதாக கூறுகிறார். ஏற்கனவே பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனை சமாளிக்க முடியாமல் தான் வனிதா அதிலிருந்து விலகினார். தற்போது பிக்பாசிற்கும் வர போகிறார் என்பதை நினைத்து தான் வனிதா இப்படி முடிவு செய்திருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X