கமல் - உதயநிதி இணையும் படத்தின் டைரக்டர் இவர் தானா?...வெளியான செம தகவல்

சென்னை : விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமலில் அடுத்தடுத்த படங்கள் மட்டுமல்ல, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படங்களும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகின்றன.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது. கமல் நடித்த ராஜபார்வை படத்தை முதன் முதலில் தயாரித்த இந்த நிறுவனம், தொடர்ந்து கமல் நடிக்கும் படங்களை மட்டுமே தயாரித்து வந்தது.

குருதிப்புனல், விஸ்வரூபம், தேவர்மகன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த இந்த நிறுவனம் கடைசியாக கமல் நடித்த விக்ரம் படத்தையும் தயாரித்தது. இந்த படம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மட்டுமல்ல, கமலில் 60 வருட சினிமா வாழ்க்கையில் பார்க்காத பெரிய வெற்றியையும், லாபத்தையும் தந்துள்ளது.

சிவகார்த்திகேயன் - கமல் படம்

சிவகார்த்திகேயன் - கமல் படம்

விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிக்கும் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை, கெளதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குவதாக சொல்லப்பட்டது.

உதயநிதி - கமல் படம்

உதயநிதி - கமல் படம்

இதைத் தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்சின் 54 வது தயாரிப்பாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் கமல் அறிவித்தார். ஆனால் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

கமல் - உதயநிதி பட டைரக்டர்

கமல் - உதயநிதி பட டைரக்டர்

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் கசிந்துள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஆர் மகேந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கும் உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சசிகுமார் நடித்த 'கிடாரி' மற்றும் வெப்தொடரான குயின் ஆகியவற்றை இயக்கியுள்ளார்.

ஷுட்டிங் எப்போ

ஷுட்டிங் எப்போ

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 54வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், இந்த படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்கள் மற்றும் திரையுலக தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X