விஜய் ரசிகர்களை சந்தித்ததற்கு இதுதான் காரணம்? உண்மையை புட்டு புட்டு வைத்த எஸ்.ஏ.சி!

சென்னை : தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், விஜய் திடீரென ரசிகர்களை சந்தித்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு

வாரிசு

தமிழில் வாரிசு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் வாரிசுடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதால் படத்திற்கு சிக்கல் எழுந்தது.

நிர்வாகிகளுடன் சந்திப்பு

நிர்வாகிகளுடன் சந்திப்பு

இந்த பிரச்சனை ஒரு பக்கம் சென்று கொண்டிருந்த போது, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் விஜய் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில், மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை விஜய் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, ரசிகர்களுடன் விஜய் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மூன்று வருடத்திற்கு ஒருமுறை

மூன்று வருடத்திற்கு ஒருமுறை

இந்நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், விஜய் இதற்கு முன்பு 3 வருடத்திற்கு ஒரு முறை ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பார். அப்போது எல்லாம் ரசிகர்கள் வருவார்கள் போட்டோ எடுப்பாங்க போய்விடுவாங்க. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பிரேக் இல்லாமல் நின்று கொண்டே ரசிகர்களுடன் போட்டோ எடுப்பார்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

குறைத்தது 2 கோடி ரசிகர்களின் வீட்டிலாவது உன் போட்டோ இருக்க வேண்டும் என்று நான் கூறுவேன். தற்போது விஜய் ரசிகர்களை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் அது பேசப்படுகிறது. ஆனால், முன்பு இதைவிட அதிக அளவில் விஜய்யை ரசிகர்களை சந்தித்து உள்ளார். ரசிகர்களை சந்திப்பதை ஒரு இலக்காகவே விஜய்யிடம் சொல்லியிருக்கேன். அதைத்தான் இப்போதும் விஜய் செய்துள்ளார்.

ஆன்மீக பயணம்

ஆன்மீக பயணம்

இமயமலை, கேதார்நாத் போன்ற இடங்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் செய்தேன் இது நல்ல அனுபவமாக இருந்தது. சினிமா தான் என் மூச்சு, ஏதாவது ஒரு உருவத்தில் சினிமாவில் இருக்க வேண்டும் அதுதான் என் ஆசை என்றார். அண்மையில் இவர் அஜித்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் என்ஃபீல்டு பைக்குடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X