பிக்பாஸ் சீசன் 6 புது மாதிரியா இருக்க போகுதாம்...எப்போ ஆரம்பம் தெரியுமா?

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ், வெற்றிகரமாக 5 சீன்களை நிறைவு செய்துள்ளது. இதன் வெற்றிக்கு முக்கிய காரணம் நடிகர் கமல்ஹாசனே இந்த 5 சீன்களையும் தொகுத்து வழங்கியது தான்.

Recommended Video

ஒன்று சேர்ந்த Biggboss பிரபலங்கள் | Thotta | Rio Raj | Ramya Pandian | Tamil Filmibeat

பிக்பாஸ் சீசன் 5 இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைந்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே ஓடிடி வெர்சனாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் துவங்கப்பட்டது. ஆனால் இது 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது.

முந்தைய 5 சீசன்களை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் ஆரம்பத்தில் கமலே தொகுத்து வழங்கினார். பிறகு விக்ரம் பட வேலைகள் காரணமாக பாதியிலேயே அதிலிருந்து விலகினார் கமல். அவருக்கு பதில் சிம்பு அந்த நிகழ்ச்சியை தொடர்ந்தார். அவர் வந்த பிறகு நிகழ்ச்சி விறுவிறுப்பானது.

நான் நிச்சயம் வருவேன்

நான் நிச்சயம் வருவேன்

இதனால் பிக்பாஸ் சீசன் 6 ஐ சிம்பு தொகுத்து வழங்குவாரா அல்லது கமல் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் பிக்பாஸ் 6 ஐ தானே தொகுத்து வழங்க உள்ளதாகவும், மக்களை சந்திக்க கிடைக்கும் வாய்ப்பை தான் ஒரு போதும் தவற விட மாட்டேன் என்றும் கமலே அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி விட்டார்.

 தள்ளி போகிறதா பிக்பாஸ்

தள்ளி போகிறதா பிக்பாஸ்

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு சீசன்களும் தாமதமாக அக்டோபர் மாதமே துவங்கப்பட்டது.இதனால் பிக்பாஸ் 6 எப்போது துவங்கப்படும் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பிக்பாஸ் சீசன் ஆகஸ்ட் மாதம் துவங்கப்படும் என முதலில் சொல்லப்பட்டது. பிறகு நவம்பருக்கு தள்ளி போவதாகவும் சொல்லப்பட்டது.

இந்த தேதியில் தான் ஆரம்பமா?

இந்த தேதியில் தான் ஆரம்பமா?

லேட்டஸ்ட் தகவலின் படி, அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இந்த நிகழ்ச்சி தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.பிக்பாஸ் 6 நிகழ்ச்சிக்கான டெஸ்ட் ஷுட்டை கமல் ஏற்கனவே முடித்து விட்டதாகவும், விரைவில் இதற்கான ப்ரோமோ வெளியிடப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 வேற லெவல் பிளானா இருக்கே

வேற லெவல் பிளானா இருக்கே

சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தேர்வு சரியில்லை என பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து இந்த முறை வேற லெவல் போட்டியாளர்களை களமிறக்க விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சர்ச்சைக்குரிய போட்டியாளர்களை அதிகம் களமிறக்கவுள்ளதால், விஜய் டிவி தொகுப்பாளர்கள் குறைவாகவே இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஹிட்டாக்கியே தீரணும்

ஹிட்டாக்கியே தீரணும்

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக வேண்டும் என விஜய் டிவி திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கேற்றவாறு போட்டியாளர்களும் வேற லெவலில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.சர்ச்சை போட்டியாளர்கள் ஒரு புறம், விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகி வரும் கமல் என பிக்பாஸ் சீசன் 6 செம பரபரப்பாக இருக்க போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X