»   »  தெறி படத்தின் 'கதை' இதுதான்.. இணையத்தை சுற்றும் சுவாரஸ்யங்கள்

தெறி படத்தின் 'கதை' இதுதான்.. இணையத்தை சுற்றும் சுவாரஸ்யங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் வெளியகாகவிருக்கும் தெறி படத்தின் கதை இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

விஜய் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இப்படத்தைப் பற்றி தினமும் ஒரு தகவல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.


Is This The Story Of Theri

இந்நிலையில் இப்படத்தின் கதை தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.


விஜய்


தெறி படத்தில் விஜய் ஒரே கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருக்கிறாராம். இந்தப் படத்தில் ஒரு விஜய்தான் அவரின் தோற்றம் மட்டுமே மாறுபடும் என்று கூறுகின்றனர். அதன்படி மொத்தம் 3 விதமான தோற்றங்களில் விஜய் நடித்திருக்கிறார்.


விஜய்-சமந்தா


மருத்துவரான சமந்தா, விஜய்யை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் எதிரிகள் சமந்தாவைக் கொன்று விடுகின்றனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் விஜய் மகள் நைனிகாவை, மொட்டை ராஜேந்திரனுடன் வட இந்தியாவிற்கு அனுப்பி வைத்து விடுகிறார்.


எதிரிகளை


தன்னுடைய மனைவியைக் கொன்ற எதிரிகளை விஜய் தன்னுடைய ஸ்டைலில் பழி வாங்குவாராம். பின்னர் தன்னுடைய மகளுடன் சென்று விஜய் சந்தோஷமாக இருப்பது போல இப்படத்தின் கதையை அட்லீ அமைத்துள்ளதாக கூறுகின்றனர்.


தெறி 2


மகள் நைனிகாவின் ஆசிரியை வேடத்தில் எமி ஜாக்சன் நடித்திருக்கிறாராம். மேலும் இப்படத்தின் இறுதியில் தெறி 2 உருவாகும் என்பது போல காட்சிகளை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.


இதுதான் இப்படத்தின் உண்மையான கதையா? என்பது தெரியவில்லை. எனினும் படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Vijay's Theri details about the film's plot have been making the rounds in various social and online media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil