Don't Miss!
- News
உருட்டு கட்டையை எடுத்து ஒரே அடி.. ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி தலை சிதறி பலி! சென்னையில் ஷாக்
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Lifestyle
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
விஜய் - அட்லீ இணையும் அடுத்த படத்தின் டைட்டில் இதுதானா?...தளபதி 68 லோடிங்கா ?
சென்னை : டைரக்டர் ஷங்கரிடம் அசிஸ்டென்டாக இருந்து, பிறகு நயன்தாரா, சத்யராஜ், ஆர்யா, ஜெய் நடித்த ராஜா ராணி படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் டைரக்டர் அட்லீ. முதல் படமே ஹிட் படமாக அமைந்ததால் கோலிவுட்டில் பிரபலமான டைரக்டரானார்.
விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 ஹிட் படங்களை கொடுத்தார். விஜய் - அட்லீ காம்போ என்றாலே பிளாக்பஸ்டர் வெற்றி எனும் அளவிற்கு பிராண்ட் ஆகி விட்டனர். அடுத்து இந்த காம்போ எப்போது இணையும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோலிவுட்டில் விஜய்யை இயக்கி 3 ஹிட் கொடுத்த அட்லீ, தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். பாலிவுட்டில் தடம் பதிக்கும் முதல் படமே ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஷாருக்கான், நயன்தாரா, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
ஷாருக்கான், அட்லீ பட தலைப்பு இதுதான்.. டபுள் ரோலில் டபுள் ட்ரீட்!

விஜய் சேதுபதி வில்லனா?
இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களுடன் விஜய் சேதுபதி மிக முக்கியமான ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிப்பதாக ஒரு சில தகவல்களும், கெஸ்ட் ரோலில் தான் நடிக்கிறார் என மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது.

ஜவான் ரிலீஸ் எப்போ
ஜவான் படம் 2023 ம் ஆண்டு ஜூன் 2 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சமயத்தில் அட்லீ, விஜய்யை வைத்து மற்றொரு படத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் பல நாட்களாக ஆர்வமாக கேட்டு வருகிறார்கள். ஆனால் விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தளபதி 67 அறிவிப்பு வரவேயில்லையே
இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 படத்தில் 6 வில்லன் நடிக்கிறார்கள், மன்சூர் அலிகான் நடிக்கிறார், சமந்தா மற்றும் த்ரிஷா ஆகியோர் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் படம் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

அட்லீ - விஜய் பட டைட்டில் இதுவா?
இந்த சமயத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட டைரக்டர் அட்லீயிடம், நிகழ்ச்சி தொகுப்பாளரும் சின்னத்திரை நடிகருமான தீபக்,விஜய்யின் அடுத்த படத்தில் அவர் முதலமைச்சராக நடித்தால், அந்த படத்திற்கு என்ன டைட்டிலாக இருக்கும். நீங்க என்ன டைட்டில் வைப்பீங்க என கேட்டார். அவர் என்ன சொல்ல போகிறார் என அனைவரும் ஆர்வமாக அட்லீயை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இப்படி ஒரு பிளான்ல இருக்காரா?
சிறிது நேரம் யோசித்த அட்லீ, ஆழப்போறான் தமிழன் என சொன்னார். இதைக் கேட்டதும் அரங்கமே அதிர்ந்தது. இருந்தாலும் தொடர்ந்து பேசிய அட்லீ, அப்படி ஒரு ஜோனலில் நான் இதுவரை டிராவல் பண்ணல. ஆனால் அந்த ஜோனலில் ஒரு கதை, டைட்டில் ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கேன் என ஓப்பனாக சொன்னார் அட்லீ.

தளபதி 68 படமா இருக்குமோ?
இதனால் அட்லீ - விஜய் அடுத்ததாக இணைய போகும் படம் தளபதி 68 ஆ? அடுத்து இவர்கள் இணையும் படத்திற்கு இது தான் டைட்டிலா? என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். ஒருவேளை அப்படி நடந்தால், கேஜிஎஃப் படத்தை குழி தோண்டி புதைக்கும் படமாக அந்த படம் அமையும் என ரசிகர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.தளபதி 67 அறிவிப்பு தான் வரல, ஆனால் அட்லீ இவ்வளவு ஓப்பனாக சொல்வதை பார்த்தால் தளபதி 68 படத்தின் அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.