விஜய்யின் தளபதி 67 டைட்டில் இதுவா...லோகேஷ் இப்படி வைக்க மாட்டாரே

சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் இந்திய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவில் 420 கோடிக்கும் அதிகமான வசுலை பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதனால் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் என்பது பற்றி தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை இயக்க போகிறார், அது எப்படி பட்ட கதையாக இருக்கும், இது பற்றிய அறிவிப்பு எப்போ வரும் என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை தான் இயக்க போவதாக லோகேஷ் அறிவித்து விட்டதால், அந்த படம் பற்றிய அறிவிப்பு, அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். வாரிசு படத்தை விட தளபதி 67 படம் தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி 67 அறிவிப்பு எப்போ

தளபதி 67 அறிவிப்பு எப்போ

இந்நிலையில் தளபதி 67 படத்தை மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமார் தான் தயாரிக்க போகிறார், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரில் இந்த படம் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. 2019 ம் ஆண்டு மாஸ்டர் பட டைட்டில் வெளியிடப்பட்ட அதே ஆகஸ்ட் 24 ம் தேதியன்று சென்டிமென்டாக தளபதி 67 படத்தின் அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்டர், விக்ரம் மீண்டும் இணைகிறதா

மாஸ்டர், விக்ரம் மீண்டும் இணைகிறதா

மாஸ்டர் பட டீம் மீண்டும் இணையும் தளபதி 67 படத்திலும் பிலோமின் ராஜ் தான் எடிட்டிங் வேலைகளை கவனிக்க போகிறாராம். இவர் தான் லோகேஷின் விக்ரம் உள்ளிட்ட பெரும்பாலான படங்களுக்கு எடிட்டிங் செய்தவர். மாஸ்டர், விக்ரம் படங்களில் பணியாற்றிய டீம் தளபதி 67 படத்தில் இணைய உள்ளது ஏறக்குறைய உறுதியாகி விட்டதால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

தளபதி 67 டைட்டில் இதுவா

தளபதி 67 டைட்டில் இதுவா

படம் பற்றிய அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கையில், விக்கிபீடியாவில் தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விக்கிபீடியா பக்கத்தில் தளபதி 67 படத்திற்கு நான் வாழும் உலகம் என டைட்டில் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லோகேஷ் இப்படி பண்ண மாட்டாரே

லோகேஷ் இப்படி பண்ண மாட்டாரே

நிஜமாகவே இது தான் தளபதி 67 படத்தின் டைட்டிலா என்பது தெரியவில்லை. விக்கிபீடியா பக்கத்தை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்பதால் இது உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்று தான் சொல்லப்படுகிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் எப்போதும் தனது படங்களுக்கு ஒரே வார்த்தையில் தான் டைட்டில் வைப்பார். அதனால் இப்படி ஒரு டைட்டிலை அவர் வைப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு தான்.

இது தான் விஜய்யின் கேரக்டரா

இது தான் விஜய்யின் கேரக்டரா

அதே சமயம் தளபதி 67 படம் கேங்ஸ்டர் கதை. அட்லி இயக்கிய பிகில் படத்தில் வரும் மைக்கேல் ராயப்பன் கேரக்டர் போன்ற கேரக்டரில் தான் விஜய் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் கதை என்ன என்பது பற்றி லோகேஷ் கனகராஜ் இதுவரை இறுதி செய்யவில்லையாம்.

Recommended Video

Kolai | கையில் சிகரெட்டுடன் Radhika...வில்லி Poster கிளப்பிய சர்ச்சை *Kollywood | Filmibeat Tamil
விஜய் என்ன பிளான் வைத்துள்ளார்

விஜய் என்ன பிளான் வைத்துள்ளார்

விஜய் தற்போது ஐதராபாத்தில் வாரிசு பட ஷுட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் அக்டோபர் மாதம் தான் முடிவடையும் என சொல்லப்படுகிறது. வாரிசு பட ஷுட்டிங் முடிந்ததும் சிறிய பிரேக்கிற்கு பிறகு தான் தளபதி 67 வேலைகளை விஜய் துவங்குவார் என சொல்லப்படுகிறது. வாரிசு படம் 2023 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் 2023 ல் இரண்டாவதாக ரிலீசாகும் விஜய் படம் தளபதி 67 படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X