இவர் தான் ஏகே 63 டைரக்டரா?...இந்த ட்விஸ்டை எதிர்பார்க்கவே இல்லையே
சென்னை : அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். ஜுன் மாதத்தில் நிறுத்தப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதத்திற்கு பிறகு அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏகே 61 படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் படத்தில் லீட் ரோலில் நடிக்கும் அஜித், மஞ்சு வாரியர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ஏகே 61 படத்தின் பெரும்பாலான ஷுட்டிங் வேலைகள் முடிக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் 30 சதவீதம் ஷுட்டிங் மட்டுமே மீதம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இந்த மாதத்தில் வெளியிடப்படலாம் என்றும், டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் ஏகே 61 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஏகே 62 ரிலீசே முடிவாகிடுச்சா
இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க அஜித் கமிட்டாகி உள்ளார். அனிருத் இசையைமைக்க உள்ள இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. 2023 ம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏகே 63 டைரக்டர் யார்?
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏகே 63 டைரக்டர் யார் என்பது பற்றிய தகவல்கள் தான் சோஷியல் மீடியாவில் சீரியசாக பேசப்பட்டு வருகிறது.முதலில் சுதா கொங்கரா தான் ஏகே 63 படத்தை இயக்க உள்ளதாக தகவல் பரவியது.

படம் பண்ணுவேன்...ஆனா இப்போ இல்ல
ஆனால் இது பற்றி அவரிடம் கேட்ட போது அஜித்துடன் ஒரு படம் பண்ணுவேன். ஆனால் ஏகே 63 படமா என உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் ஒரு படத்தை முடிக்க தனக்கு 3 ஆண்டுகள் ஆகிறது. தற்போது கமிட்டான படங்களில் பிஸியாக உள்ளேன் என சொல்லி விட்டார்.

அஜித்திற்காக கதை ரெடி
இவரைத் தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய புஷ்கர் - காயத்ரி, அஜித்திற்காக ஒரு கதை உருவாக்கி வருவதாக சொன்னதால் அவர்கள் தான் ஏகே 63 என தகவல் பரவியது. இதனால் ஏகே 63 படத்தை இயக்க போவது யார் என தெரியாமல் ரசிகர்கள் செம குழப்பமாகினர்.

இவர் தான் ஏகே 63 டைரக்டரா?
தற்போது லேட்டஸ்ட் தகவலாக, 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய டைரக்டர் ஸ்ரீ கணேஷ் தான் ஏகே 63 படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஸ்ரீகணேஷ் இந்த தகவலை ஏறக்குறைய உறுதி செய்துள்ளார்.

இதை யாரும் எதிர்பார்க்கலியே
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நீண்ட காலமாக தாமதமாகி வந்த குருதி ஆட்டம் படம் சமீபத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இவர் டைரக்டர்மிஷ்கினிடம் அமிஸ்டென்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











