»   »  'த்ரிஷா இல்லனா நயன்தாரா -2' வருமா வராதா? - ஜி.வி.பிரகாஷ் ஐடியா என்ன?

'த்ரிஷா இல்லனா நயன்தாரா -2' வருமா வராதா? - ஜி.வி.பிரகாஷ் ஐடியா என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. வசூலில் வெற்றிபெற்ற இந்தப் படத்தை அடுத்து சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.

'AAA' படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜி.வி.பிரகாஷை அணுகி தனக்கு மீண்டும் கால்ஷீட் தரும்படி கேட்டிருக்கிறார் ஆதிக். கதையைக் கூட கேட்காமல் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஜி.வி.பிரகாஷ்.

Is Trisha illana nayanthara 2 movie will come?

இந்தப் படத்திற்கு 'விர்ஜின் மாப்பிள்ளை' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகத் என்று தகவல்கள் வெளியாகின. 'விர்ஜின் மாப்பிள்ளை' என்ற டைட்டிலுக்கு பதிலாக 'த்ரிஷா இல்லனா நயன்தாரா-2' என்று டைட்டில் வைக்கவும் படக் குழுவினர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், 'த்ரிஷா இல்லனா நயன்தாரா-2' படம் பண்ணவில்லை என்றும், அப்படியொரு பேச்சுவார்த்தையே எங்களுக்குள் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஆக, 'விர்ஜின் மாப்பிள்ளை' டைட்டிலில் மாற்றம் இல்லை எனத் தெரிகிறது.

English summary
GV Prakash starring Aadhik Ravichandran's movie 'Trisha Illana Nayanthara'. The film 'Virgin Maappillai' is being produced again. The film was supposed to be titled 'Trisha Isna Nayantara 2'. Now, GV Praksh cleared the doubts about the movie title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X