For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னது...வலிமை பார்ட் 2 எடுக்க போறாங்களா...அப்போ ஏகே 61 ?

  |

  சென்னை : அஜித் நடித்துள்ள வலிமை படம் ரிலீசாக இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. இதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கையில் வலிமை பார்ட் 2 எடுக்க போனி கபூர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

  அஜித் நடித்த வலிமை படம் பல தடைகள், தாமதங்களை தாண்டி பிப்ரவரி 24 ம் தேதி ரிலீசாக உள்ளது. ஹுமா குரேஷி, கார்த்திகேயா, கும்மகொண்டா, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளில் பல முறை தள்ளிப்போன வலிமை படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

  ப்ரொமோஷனே இல்லாமல் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையில் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்துவதற்காக ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர். வலிமை படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரமும் கோடிகளை குவித்து வருகிறது. பலரிடமும் இந்த படம் பாராட்டையும் பெற்றுள்ளது.

  இந்த நாளை மறக்கவே முடியாது... உருகிய டாக்டர் நாயகன்... எதுக்கு? இந்த நாளை மறக்கவே முடியாது... உருகிய டாக்டர் நாயகன்... எதுக்கு?

  வலிமை படத்தில் என்ன ஸ்பெஷல்

  வலிமை படத்தில் என்ன ஸ்பெஷல்

  இந்நிலையில் சமீபத்தில் வலிமை படம் பற்றி டிவி சேனல் ஒன்றிற்கு போனி கபூர் பேட்டி அளித்தார். அதில், வலிமை படம் எப்படி உள்ளது என்பதை ஒரு வரியில் சொல்லி விட முடியாது. இது அனைவரையும் திருப்திபடுத்தும் ஒட்டுமொத்தமான பொழுதுபோக்கு படம். இதில் குடும்ப சென்டிமென்ட், சகோதரர் பாசம், நட்பு, நிறைய ஆக்ஷன் என அனைத்தும் இருக்கு. நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம் தான் படம். மது சிஸ்டெம் மற்றும் சமூகத்தில் இருந்து தீமைகளை சுத்தம் செய்யும் வேலையை தான் ஹீரோ பார்க்கிறார். ஒரு கமர்ஷியல் சினிமாவை சுவாரஸ்யமாக, ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியதான அனைத்தும் இந்த படத்தில் இருக்கு என படம் பற்றி கூறினார் போனி கபூர். இவரின் இந்த வார்த்தைகள் ரசிகர்களிடம் வலிமை படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

  வலிமை 2 வருமா

  வலிமை 2 வருமா

  பலரும் ஆர்வமாக கேட்டு வரும் வலிமை 2 வருமா என போனி கபூரிடம் கேட்டதற்கு, முன்பு எனக்கு அப்படி ஒரு எண்ணம் கிடையாது. ஆனால் சோஷியல் மீடியாவில் எழுந்து கோரிக்கைகள், வலிமை மீதான ரசிகர்களின் ஆர்வம், கொண்டாட்டங்களை படித்த பிறகு அப்படி ஒரு எண்ணம் என் மனதிலும் தோன்றி உள்ளது. அது டைரக்டரின் மனதிலும் நிச்சயம் தோன்றி இருக்கும் என நினைக்கிறேன். ரசிகர்கள் இதை விரும்பினால், குறிப்பாக அஜித் ரசிகர்கள் இதை விரும்பினால் நிச்சயம் வலிமை 2 வரும் என நம்பலாம். வலிமை படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் விருப்பப்பட்டால் கண்டிப்பாக வலிமை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என்றார். போனி கபூரே இப்படி சொல்லி விட்டதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  அப்போ ஏகே 61

  அப்போ ஏகே 61

  ஆனால் வலிமை படம் ரிலீசானதும் மார்ச் 9 ம் தேதி முதல் ஏகே 61 படத்தின் ஷுட்டிங்கை துவக்க போவதாக ஏற்கனவே கூறி உள்ளார்கள். முதல் கட்ட ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்தில் சென்னை அண்ணா சாலையை பிரம்மாண்ட செட்டாக அமைத்து வருவதாக கூறப்பட்டது. ஏகே 61 ல் அஜித், ஹீரோ - வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அஜித்தின் நெகடிவ் ரோல் போட்டோ ஒன்றை வெளியிட்டு எதை உறுதிப்படுத்தினார் போனி கபூர்.

  குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்

  குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்

  ஏகே 61 ஷுட்டிங் தயாராக உள்ளதாக கூறப்படும் நிலையில், வலிமை 2 படமும் வர போவதாக போனி கபூர் கூறி உள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏகே 61 முதலில் வருமா அல்லது வலிமை 2 முதலில் வருமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அல்லது வலிமை 2 தான் ஏகே 61 ஆ என்றும் கேட்டு வருகிறார்கள்.

  English summary
  In his recent interview, Boney Kapoor said that if the audience or Ajith fans want a sequel to Valimai, then it will be on the way. After reading fans demand on social media the thought has reached my mind.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X