Don't Miss!
- News
திருக்குறளை கூட சலுகை என நினைத்து விட்டாரோ.. 'எந்த விதத்திலும் உதவாத பட்ஜெட்'.. தொல். திருமாவளவன்
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடிகர் விஜய் அம்மா பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு.. உண்மையா? ஃபேக்கா? குழப்பத்தில் ரசிகர்கள்!
சென்னை: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மனைவியும் நடிகர் விஜய்யின் அம்மாவும் பின்னணி பாடகியுமான ஷோபா சந்திரசேகர் பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ட்விட்டர் கணக்கு போலி என ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த கணக்கில் இருந்து ஷேர் செய்யப்பட்ட முதல் போஸ்ட்டுக்கு கீழே கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆனால், சில பி.ஆர்.ஓக்கள் அந்த கணக்கை ஃபாலோ செய்துள்ளதால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தனுஷ்
புரூஸ்
லீ
போல
மூன்று
விதமான
ஆக்சன்
போஸில்...
குடியரசுதினத்தில்
வெளியாகும்
ஃபர்ஸ்ட்
சிங்கிள்!

ஷோபா சந்திரசேகர்
தயாரிப்பாளர், கதையாசிரியர், பின்னணி பாடகி என பன்முகத் திறமை கொண்டவர் ஷோபா சந்திரசேகர். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரை திருமணம் செய்து கொண்ட ஷோபா சந்திரசேகர் 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யை பெற்றார். நடிகர் விஜய்யின் நெஞ்சினிலே படத்தின் கதையாசிரியரும் இவர் தான். மகன் விஜய்யுடன் இணைந்து ஏகப்பட்ட சினிமா பாடல்களையும் பாடியுள்ளார்.

ட்விட்டர் கணக்கு
73 வயதாகும் ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் புதிதாக இணைந்துள்ளதாக ஒரு கணக்கு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யை மட்டுமே அந்த கணக்கு ஃபாலோ செய்திருக்கிறது. ஒரே நாளில் 5000 பேர் அந்த கணக்கை பின் தொடர்ந்துள்ளனர். ஆனால், இந்த கணக்கு உண்மையா? போலியா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அம்மாவுடன் விஜய்
தளபதி விஜய் பீஸ்ட் பட கெட்டப்பில் அவர் அம்மா ஷோபா சந்திரசேகர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இந்த ட்விட்டர் கணக்கு முதல் போஸ்ட்டாக போட்டு ஃபாலோயர்களை அள்ளி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வரும் நிலையில், இப்படியொரு ஐடி இணையத்தில் உலாவி வருவது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

இது ஃபேக் ஐடி
விஜய் ரசிகர்கள் பலரும் இது ஃபேக் ஐடி என்றும் அம்மா ஷோபா சந்திரசேகருக்கு சமூக வலைதள பக்கங்களில் எந்தவொரு கணக்கும் இல்லை என்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் புகைப்படத்தை வைத்து இப்படி யாரோ ஒரு நெட்டிசன் விளையாடி வருகிறார் என விஜய் ரசிகர்கள் ரிப்போர்ட் அடித்து வருகின்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
நீங்க ஃபேக் ஐடியா என கலாய்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் மீம் போட்டு வருகின்றனர். விஜய் ரசிகர்கள் இது கண்டிப்பாக ஃபேக் ஐடி தான் எல்லோரும் ரிப்போர்ட் பண்ணி இந்த ஐடியை தூக்குங்க என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் வருமா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், நவம்பர் மாதமே தொடங்கப்பட்ட இந்த கணக்கில் இப்போதுதான் முதல் போஸ் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மகள் பெயரிலும்
ஏற்கனவே நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா பெயரிலும் இதே போல போலி ட்விட்டர் கணக்கு ஒன்று வலம் வந்து கொண்டிருந்தது. அப்படியே நடிகர் விஜய்யின் மகள் போலவே அவர் பதிவிடும் ட்வீட்களை பார்த்து ஏகப்பட்ட விஜய் ரசிகர்களே ஏமாந்து போனார்கள். பின்னர் அது ஃபேக் ஐடி என தெரிய வந்ததும் அந்த ஐடிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ரிப்போர்ட் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல பல பிரபலங்களின் பெயர்களிலும் போலி ட்விட்டர் கணக்கு உலாவி வருவது குறிப்பிடத்தக்கது.