»   »  பிரபல சீனியர் நடிகருக்கு புற்றுநோயா?: தீயாக பரவிய புகைப்படம்

பிரபல சீனியர் நடிகருக்கு புற்றுநோயா?: தீயாக பரவிய புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் வினோத் கன்னாவுக்கு புற்றுநோய் இருப்பதாக ஒரு வதந்தி தீயாக பரவியது.

ஒரு காலத்தில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் வினோத் கன்னா(70). வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக ஆனவர். அவர் நீர்ச்சத்து குறைவு காரணமாக கடந்த 2ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

சல்மான்

சல்மான்

வாண்டட், தபாங் போன்ற படங்களில் வினோத் கன்னாவின் மகனாக நடித்துள்ளார் சல்மான் கான். இந்நிலையில் தனது ரீல் தந்தையை மருத்துவமனைக்கு சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார் சல்மான்.

புகைப்படம்

புகைப்படம்

வினோத் கன்னா மருத்துவமனையில் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து கன்னாவுக்கு புற்றுநோய் இருப்பதாக வதந்தி பரவியது.

நலம்

நலம்

வினோத் கன்னாவுக்கு புற்றுநோய் இல்லை. அவர் நலமாக உள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று அவரின் மகனும், நடிகருமான அக்ஷய் கன்னா தெரிவித்துள்ளார்.

கன்னா

கன்னா

மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வினோத் கன்னா மிகவும் மெலிந்து வீக்காக காணப்பட்டார். இதையடுத்தே புற்றுநோய் வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vinod Khanna was hospitalised last week and his son Rahul said that his father was being treated for severe dehydration, but a recent leaked picture from the hospital shows otherwise. The actor looks extremely pale and reports are doing the round that he's suffering from bladder cancer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil