Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஒரே நேரத்தில் ஆஸ்கர், வாழ்நாள் சாதனையாளர் விருது.. வெங்கட் பிரபு எதுக்காக இப்படி சொல்லியிருக்காரு?
ஐதராபாத் : வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா, க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகவுள்ளது என்சி22 படம்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கவுள்ளார்.
ஆக்ஷன் மட்டும் பார்த்தால் வீடியோகேம் தான், எமோஷன் பிளஸ் ஆக்ஷன் தான் வெல்லும்...பத்ரி ஸ்பெஷல் பேட்டி

நாக சைத்தன்யாவின் 22வது படம்
நடிகர் நாக சைத்தன்யா தெலுங்கில் பல படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அவரது 22வது படத்தை பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகவுள்ளது. முன்னதாக மாநாடு, மன்மத லீலை போன்ற படங்களை கொடுத்த வெங்கட் பிரபு, இந்தப் படத்தின்மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார்.

தமிழில் அறிமுகமாகும் நாக சைத்தன்யா
இந்தப் படத்தின்மூலம் முதல் முறையாக தமிழிலும் அறிமுகமாகிறார் நடிகர் நாக சைத்தன்யா. மேலும் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பிரபல நடிகை க்ரீத்தி ஷெட்டி. முன்னதாக பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்திலும் அவர் நடித்து வரும் நிலையில் தற்போது அவரது இரண்டாவது படமாக என்சி22 படம் உருவாகவுள்ளது.

சிவகார்த்திகேயன், ராணா பங்கேற்பு
இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்ட நிலையில் பூஜையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், கங்கை அமரன் மற்றும் ராணா ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கவுள்ளனர்.

இளையராஜா தெலுங்கில் வாழ்த்து
படத்தின் பூஜையில் யுவன் சங்கர் ராஜாவும் கலந்துக் கொண்டார். ஆனால் இளையராஜா கலந்துக் கொள்ளவில்லை. இதையடுத்து அவர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் வெங்கட் பிரபுவிற்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். தான் இந்தப் பூஜையில் கலந்துக் கொள்ளாதது குறித்தும் தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.
|
இளையராஜா வீடியோ மெசேஜ்
அந்த வீடியோவில் இளையராஜா தெலுங்கில் வாழ்த்து மெசேஜ் அனுப்பியுள்ளார். தானும் வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரனும் இருந்தபோதிலும் வெங்கட் பிரபு அதை பயன்படுத்திக் கொள்ளாமல் சொந்தமாக முன்னேறி தன்னை தற்போது நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் வெங்கட் பிரபுவிற்கு அவர் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்கர் என வெங்கட் பிரபு நெகிழ்ச்சி
இந்நிலையில் இந்த வீடியோ மெசேஜிற்கு வெங்கட் பிரபு நன்றி தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார். ஆஸ்கர் விருதை வாங்கிய மனநிறைவை இந்த வாழ்த்து தனக்கு கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இது தனது வாழ்நாள் சாதனை விருது என்றும் குறிப்பிட்டுள்ளார். ராஜாப்பா நன்றி என்றும் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் படம்
ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாச சித்தூரி இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து ரசிகர்களுக்கு பரிசாக கொடுக் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். நாக சைத்தன்யா முதல் முறையாக தமிழ் ரசிகர்களிடம் இந்தப் படம் மூலம் அறிமுகமாகவுள்ளார். அவரை தமிழ் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.