எனக்கு அதெல்லாம் தேவையில்லை.. இந்த வாரம் வீட்டுக்கு போக தயாராகிட்டாரோ இசை.. ரொம்ப டெரரா இருக்காரே!
சென்னை: பிடிக்காதவர்களுக்கு முன்பாக பிடித்தது போல நடித்து பேட்ஜை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எல்லாம் எனக்கு இல்லை என இசைவாணி முகத்தில் அடித்தது போல சொல்லி உள்ளது ரசிகர்களுக்கு முகம் சுளிக்க வைத்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே இசைவாணி அமைதிப்படையாகத் தான் இருந்தார். ஆண்டவர் தான் அவரை உசுப்பேற்றி இப்படி ஆக்கி விட்டார் என்கிற குற்றச்சாட்டையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.
தாமரை செல்வியுடன் தடாலடி சண்டைக்கு செல்லும் இசைவாணி தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என ஏகப்பட்ட கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

காயின் யூஸ் பண்ணல
வார வாரம் நாம தான் முன்னாடியே சேவ் ஆகிடுறோமே இந்த வாரம் எதுக்கு காயினை யூஸ் பண்ணனும் என இசைவாணி மறுத்து விட்டார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து இசைவாணி வெளியேறும் சூழல் உருவான நிலையில், காயினை பயன்படுத்தி கேப்டன் பதவியை பிடுங்கிக் கொண்டு சேவ் ஆனார்.

முன்பை போலை இல்லை
ஆரம்பத்தில் அமைதியே உருவான இசைவாணியாகவும் பொறுப்புள்ள பெண்ணாகவும் இருந்த இசைவாணியை வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை. கடந்த இரு வாரங்களாக அவருக்கு தனியாக கொம்பு முளைத்தது போல நடந்து கொள்கிறார். முன்பை போல அவர் இல்லை என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

பாயாசம் போட்ட தாமரை
தாமரை செல்வியிடம் இதுவரை பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்ட பலரும் வெளியேறிய நிலையில், இந்த வாரம் இசைவாணிக்குத் தான் அந்த பாயாசம் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டை விட்டு குறைவான ஓட்டுக்களை பெற்று இசைவாணி தான் வெளியேறுவார் என உறுதியாகவே நம்புகின்றனர்.

பேட்ஜ் வேண்டாம்
பிடிக்காதவர்களிடம் வெறும் பேட்ஜுக்காக எல்லாம் என்னால் நடிக்க முடியாது. அதெல்லாம் தேவையில்லைன்னு தூக்கி எறிந்து விட்டு போயிடுவேன் என பிக் பாஸ் டாஸ்க்கையே கொஞ்சம் கூட மதிக்காத படி பேசிய இசைவாணிக்கு இனி இந்த வீட்டில் இடமில்லை என்றே கருதப்படுகிறது. சனிக்கிழமை மாலையே இசை வெளியேறினாரா? இல்லை யார் வெளியேறினார் என்கிற தகவல் கசிந்துவிடப் போகிறது.


Click it and Unblock the Notifications











