twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பல நாள் பட்டினி… சாப்பாட்டுக்கே வழியில்லை… கண்ணீர் விட்டு அழுத இசைவாணி!

    |

    சென்னை : கானா பாடகி இசைவாணி தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து கண்ணீர் மல்க கூறினார்.

    Recommended Video

    Bigg Boss Season 5 Promo | போட்டுக்க Dress கூட இல்ல, கலங்கும் Housemates

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான பாத்ரூம் க்ளீனிங், சமையல், ஹவுஸ் கீப்பிங், பாத்திரம் கழுவுவது போன்ற டீம்கள் பிரிக்கப்பட்டன.

    இந்த சீசனில் ராப் பாடகி, நாட்டுப்புற பாடகி, மாடல் அழகிகள், யூடியூபர், தொகுப்பாளர் என பல துறைகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

    ஷகிலாவின் மகளை கழட்டி விட்ட பிக்பாஸ் டீம்… வருத்தத்தில் மிலா !ஷகிலாவின் மகளை கழட்டி விட்ட பிக்பாஸ் டீம்… வருத்தத்தில் மிலா !

    நாங்க வேறமாதிரி

    நாங்க வேறமாதிரி

    நாங்க வேறமாதிரி... வேறமாதிரி பாட்டுடன் பிக்பாஸ் 2வது நாள் மகிழ்ச்சியுடன் தொடங்கியது. தொடக்கமே அமர்களமா இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசுமாறு பிக் பாஸ் அறிவுறுத்தினார்.

    வெறும் 7 ரூபாய்

    வெறும் 7 ரூபாய்

    இதையடுத்து பேசிய இசைவாணி, என் அப்பா கீபோடு பிளேயர், அவர் ஹார்பரில் வேலைபார்த்து வந்தார் நான் சிறுவயதாக இருக்கும் போதே அப்பாவுக்கு வேலைபோய்டுச்சு குடும்பமே சாப்பாட்டுக்கூட ரொம்ப கஷ்டப்பட்டோம். வேற வழி இல்லாமல், என் அம்மா போஸ்ட் ஆபிசில் கூலிவேலை பார்த்தாங்க அவங்களுக்கு அப்போ சம்பளம் வெறும் 7 ரூபாய், அந்த பணத்தை வச்சித்தான் நான்,என் அம்மா, என் அப்பா, என் அண்ணன் அனைவரும் சாப்பிடுவோம். பல நாள் பட்டினியாக இருந்து இருக்கிறேன், சாப்பாட்டுக்கே வழி இல்லை என்று கண்ணீர் விட்டு அழுதார்.

    போட்டுக்க டிரேஸ் இல்லை

    போட்டுக்க டிரேஸ் இல்லை

    எனக்கு போட்டுக்க நல்ல டிரேஸ் கூட இல்லை. வெறும் 30 ரூபாய்க்கு எனக்கு டிரேஸ் வாங்கி தந்தாங்க என் அம்மா, மாத்த டிரேஸ் இல்லாமல் பல நாள் ஸ்கூல் டிரேஸ்லேயே இருப்பேன் என்று கண்ணீருடன் கூறினார். தொடர்ந்து பேசிய இசைவாணி, வாடகை கொடுக்க முடியாமல் அடிக்கடி வீடு மாத்திக்கிட்டே இருப்போம் அப்ப என் உறவினர்கள் அனைவரும் எங்களை கிண்டல் பண்ணாங்க.

     திட்டுவாங்க

    திட்டுவாங்க

    நான் 6 வயசுல இருந்து பாடுறேன் பாட்டுத்தான் எல்லாம் என்று கொஞ்சம் கொஞ்சமா பாட கத்துக்கிட்டேன். கானா பாட்டு பாட ஆரம்பிச்சேன், பாட்டுப்பாட மேடைக்கு போன எல்லாரும் என் மூச்சுமுன்னாடி திட்டுவாங்க நீ என்ன கானா பாட்டு பாடுறேன் என்று . இன்று என் குடும்பத்தை நானே பாத்துக்குற அளவுக்கு நான் வளர்ந்து இருக்கேன் என்று கூறினார்.

    அனைவரும் அழுதனர்

    அனைவரும் அழுதனர்

    இசைவாணி தான் கடந்து வந்த பாதை குறித்து அழுதுகொண்டு கூறியதை மற்ற ஹவுஸ்மெட்டுக்கள் அனைவரும் அழுதுக்கொண்டே பார்த்தனர். இதனால் அந்த இடமே நிசப்தம் நிலவி அமைதியாக இருந்தது.

    English summary
    Bigg boss 5 Gana Singer Isaivani Emotional speech at bigg boss house
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X