»   »  பாகிஸ்தான் அதிபருடன் அமெரிக்க தூதர் அவசர சந்திப்பு

பாகிஸ்தான் அதிபருடன் அமெரிக்க தூதர் அவசர சந்திப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் வெண்டி சேம்பர்லின் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை வியாழக்கிழமைஅவசரமாக சந்தித்துப் பேசினார்.

இந்த விமானத் தாக்குதலில் தொடர்புடைய ஆப்கான் தீவிரவாதி ஒசாமா பின் லேடன் மற்றும் அவரது அரேபியகூட்டாளிகள் குறித்த விவரங்களை பாகிஸ்தான் நிச்சயம் அறிந்திருக்கும் என அமெரிக்கா நம்புகிறது.

எங்களுடன் பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்காலின் பாவல் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவமும் அந் நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயும் ஆப்கன் தலிபான் தீவிரவாதிகளுடனும்ஒசாமா பின் லேடனுடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளன. இதனால், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள்,தாக்குதல் திட்டம் ஆகியவை குறித்து பாகிஸ்தானுக்குத் தான் அதிக விவரம் தெரிந்திருக்க வேண்டும் எனநம்பப்படுகிறது.

இந் நிலையில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை அமெரிக்கத் தூதர் வெண்டி சேம்பர்லின் அவரதுஇல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

தாக்குதல் விஷயத்தில் அமெரிக்கா நடத்தும் விசாரணைக்கு பாகிஸ்தான் முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும்என்று அவர் கேட்டுக் கொண்டார். முழுமையாக ஒத்துழைப்பதாக முஷாரப் உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil