சமந்தா, த்ரிஷா வரிசையில் கீர்த்தி சுரேஷ்: தளபதி 67 படத்தில் விஜய்யை ரவுண்டு கட்டும் ஹீரோயின்கள்

சென்னை: விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கிறார்.

இந்தப் படத்தில், விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வாரிசு முடிந்ததும் தளபதி 67

வாரிசு முடிந்ததும் தளபதி 67

'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து உடனடியாக 'வாரிசு' படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார் விஜய். வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ் ராஜ், ஷாம், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாரிசு, அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. இந்நிலையில், வாரிசு படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், தளபதி 67 படத்தில் இணைகிறார் விஜய்.

லோகேஷ் டீம் வெயிட்டிங்

லோகேஷ் டீம் வெயிட்டிங்

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் 'தளபதி 67' படத்திற்கு தாறுமாறான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முதல் படமான 'மாநகரம்', அடுத்து வெளியான 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் ஸ்க்ரிப்ட்டை விஜய்க்காகவே செதுக்கி வருகிறார். அதனால் கோலிவுட்டுக்கு அடுத்து ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் ரெடியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தளபதி 67 பட ஷூட்டிங்காக, லோகேஷ் கனகராஜ் டீம் வெயிட்டிங்கில் உள்ளது.

சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ்

சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ்

தளபதி 67 படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அவருக்கு யாரும் ஜோடியாக நடிக்கவில்லை என்றும், பாடல்களும் கிடையாது எனவும் தகவல் வெளியாகிருந்தது. அதேநேரம் விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன் பின்னர் த்ரிஷா நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. சமந்த, த்ரிஷா இருவரும் நடிக்கிறார்களா இல்லை யாராவது ஒருவர் மட்டும் நடிக்கிறாரா? எனத் தெரியவில்லை. இந்நிலையில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வரிசைக் கட்டும் வில்லன்கள்

வரிசைக் கட்டும் வில்லன்கள்

முதலில் சமந்தா, அடுத்து த்ரிஷா, இப்போது கீர்த்தி சுரேஷ் என தளபதி 67 படத்தின் நாயகிகள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருவதால், ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதேபோல், விஜய்க்கு வில்லனாக 6 முன்னணி நடிகர்கள் நடிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்தியில் இருந்து சஞ்சய் தத், மலையாளத்தில் இருந்து பிருத்விராஜ், ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட இன்னும் 3 பேரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. தளபதி 67 படத்தின் அப்டேட் அபிஸியலாக இன்னும் வெளியாகாத நிலையில், விஜய்யுடன் நடிக்கும் ஹீரோயின்கள், வில்லன்கள் குறித்து தகவல்கள் வெளியாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X