‘விக்ரம்’கமல் பாணியில் மல்டி ஸ்டார்ஸ் கதையில் ரஜினி... கூட்டணியில் இணையப் போவது யார் யார்?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படங்கள் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜெயிலராக சூப்பர் ஸ்டார்

ஜெயிலராக சூப்பர் ஸ்டார்

அண்ணத்த படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்கள் மூலம் அடுத்தடுத்து கோலிவுட்டின் டைம்லைனில் வந்த நெல்சன், ஜெயிலர் படம் மூலம் ரஜினியுடன் இணைந்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஜெயிலர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி ட்ரெண்டாகின.

ரஜினியின் அடுத்த பட அப்டேட்

ரஜினியின் அடுத்த பட அப்டேட்

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் யோகிபாபு, ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மற்ற நடிகர்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த இரண்டு படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தலைவர் 170, தலைவர் 171 என இரண்டு படங்களுமே லைகா தயாரிப்பில் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இயக்குநர்கள் யார் யார்?

இயக்குநர்கள் யார் யார்?

லைகா தயாரிக்கும் இந்த இரண்டு படங்களுக்கும் ரஜினி மொத்தமாக கால்ஷீட் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இதில் தலைவர் 170 படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படத்தை ஹிட் கொடுத்த சிபி சக்கரவர்த்தி, தனது இரண்டாவது படத்தில் ரஜினியுடன் கூட்டணி வைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், தலைவர் 171 படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னொரு தகவல் படி தலைவர் 171 படத்திற்கு தேசிங்கு பெரியசாமி தான் இயக்குநர் எனக் கூறப்படுகிறது.

மல்டி ஸ்டார்ஸ் கதையில் ரஜினி

மல்டி ஸ்டார்ஸ் கதையில் ரஜினி

ஆனாலும், தலைவர் 170, தலைவர் 171 படங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் மல்டி ஸ்டார்ஸ் படமாக வெளியான 'விக்ரம்' மெகா ஹிட் அடித்தது. அப்படியொரு கதையை தேசிங்கு பெரியசாமி ரஜினியிடம் கூறியதாகவும், அதில் நடிக்க அவருக்கு ஓக்கே சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. ஆனால், இந்தப் படத்தை தாணு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மல்டி ஸ்டார்ஸ் கதை பிரமாதமாக இருக்கு, அதில் கண்டிப்பாக நானே நடிப்பேன் என ரஜினி உறுதியளித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு?

விரைவில் அறிவிப்பு?

ஜெயிலர் படமே இன்னும் முடியாத நிலையில், அதற்குள் தலைவர் 170, தலைவர் 171 என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படங்கள் குறித்து ஒன்றன்பின் ஒன்றாக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ரஜினியின் மல்டி ஸ்டார்ஸ் கதையில், அவருடன் யார் யார் நடித்தல் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பெரிய விவாதத்தை நடத்தி வருகின்றனர். அதில், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருக்கின்றன. மேலும், ரஜினி மல்டி ஸ்டார்ஸ் படத்தில் நடித்தால் அது, மரண மாஸ் ஹிட்டடிக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X