அடேங்கப்பா... இத்தனை கோடி பட்ஜெட்ல வீடா..? அதுவும் விஜய் வீட்டுக்கு பக்கத்துலயா: த்ரிஷாவின் கனவு

சென்னை: மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறர்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷா, மீண்டும் கோலிவுட்டில் ரவுண்டு வர தொடங்கிவிட்டார்.
பொன்னியின் செல்வனை தொடர்ந்து அடுத்தடுத்து விஜய், அஜித் படங்களிலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், த்ரிஷா தனது நீண்டநாள் கனவு ஒன்றை நிறைவேற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 த்ரிஷாவின் கம்பேக்

த்ரிஷாவின் கம்பேக்

மெளனம் பேசியதே திரைப்படம் ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா, ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். திரையுலகில் 20 ஆண்டுகளை கடந்துள்ள த்ரிஷா, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கலைத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது விஜய், அஜித்துடன் மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்க கிளம்பிவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 த்ரிஷாவின் கனவு நனவானது?

த்ரிஷாவின் கனவு நனவானது?

விஜய் நடிக்கவுள்ள தளபதி 67ல் த்ரிஷா நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அஜித்தின் ஏகே 62 படத்திலும் த்ரிஷா நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றன. அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த 2 படங்களிலும் த்ரிஷா நாயகியாக நடிப்பது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே த்ரிஷா தனது நீண்ட நாள் கனவு ஒன்றை நனவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இத்தனை கோடி பட்ஜெட்டில் வீடா?

இத்தனை கோடி பட்ஜெட்டில் வீடா?

தமிழ், தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா, சென்னையில் தான் வசித்து வருகிறார். அஜித் வீடருகே சுமார் 5 கோடி மதிப்பிலான பிளாட்டில் த்ரிஷா வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது விஜய் வசித்து வரும் நீலாங்கரையில் பிரம்மாண்டமான வீடு வாங்கியுள்ளாராம் த்ரிஷா. அதுவும் 35 கோடி மதிப்புடைய வீடு என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

 விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

விஜய்யின் வீடு அருகே 35 கோடி ரூபாய் மதிப்பில் த்ரிஷா வீடு வாங்கியுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீண்டும் முன்னணி நடிகையாக ரவுண்டு வருவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில், விஜய்யுடன் தளபதி 67, அஜித்தின் ஏகே 62 படங்களில் நடிப்பது குறித்தும் விரைவில் அபிஸியல் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X