கமல், விக்ரமின் சக்சஸ் ஃபார்முலாவை கையில் எடுத்த சந்தானம்: இனி ஆக்சன் கிடையாது ஒன்லி காமெடி தான்

சென்னை: விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சந்தானம்.

Recommended Video

Gulu Gulu Public Review | Gulu Gulu Movie Review | குளு குளு Movie Review | Santhanam

முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக கலக்கி வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

சந்தானத்தின் புதிய படம் குறித்த சூப்பரான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

லொள்ளுசபா முதல் காமெடியன் வரை

லொள்ளுசபா முதல் காமெடியன் வரை

விஜய் டிவியில் இருந்து கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சந்தானம். லொள்ளுசபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சந்தானம், சிம்பு மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். கவுண்டமணியின் அதே நக்கல் பாணியை ஃபாலோ செய்த சந்தானத்தின் காமெடிகள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய சந்தானம்

ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய சந்தானம்

ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியில் அசத்திய சந்தானம், திடீரென ஹீரோவாக நடிக்க முடிவெடுத்தார். அப்படி அவர் ஹீரோவாக அறிமுகமான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனால், அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

குலுகுலு படத்திற்கு சிறப்பான அங்கீகாரம்

குலுகுலு படத்திற்கு சிறப்பான அங்கீகாரம்

ஹீரோவாக நடித்த சந்தானம் தேவையென்றால் ஆக்சன் காட்சிகளிலும் ரிஸ்க் எடுக்கத் தொடங்கினார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை என சொல்லப்படுகிறது. அதேநேரம் அவரின் சில படங்கள் பெரிய தோல்வியைத் தழுவியதாக, பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரங்கள் கூறின. இந்நிலையில், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘குலுகுலு' படம், அவருக்கு சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளது.

5 கெட்டப்களில் சந்தானம்?

5 கெட்டப்களில் சந்தானம்?

சந்தானம் நடிப்பில் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம், சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் உருவாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை, இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த கோவர்தன் இயக்கவுள்ளார். பேண்டசியான காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தில், சந்தானம் 5 கெட்டப்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரூட்டை மாற்றிய சந்தானம்

ரூட்டை மாற்றிய சந்தானம்

முன்னணி நடிகர்களான கமல், விக்ரம் பலவிதமான கெட்டப்களில் நடிப்பதில் கை தேர்ந்தவர்கள். தற்போது அதே சக்சஸ் ஃபார்முலாவை கையில் எடுத்துள்ள சந்தானம், இதில் பாஸ் ஆவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். அதேபோல், இனிமேல், ஆக்சன் ஜானர் படங்களில் நடிக்காமல், காமெடி படங்களில் மட்டுமே நடிக்கலாம் எனவும், சந்தானம் முடிவு செய்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X