Don't Miss!
- News
பேனா சின்னத்திற்கு எதிரான வழக்கு.. 2 துறைதான் பதில் கொடுத்திருக்கு.. ஒத்திவைத்த பசுமை தீர்ப்பாயம்!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசு படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம்… பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனுக்கே டஃப் கொடுப்பார் போல?
சென்னை: பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார்.
பல்வேறு சிக்கல்களை கடந்து வாரிசு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்திற்காக விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
4
நாட்களில்,
பீஸ்ட்,
வலிமை
வசூலை
பின்னுக்குத்
தள்ளிய
பொன்னியின்
செல்வன்..
நெக்ஸ்ட்
விக்ரம்
தான்!

கோலிவுட் வசூல் மாஸ்டர்
கோலிவுட்டின் தற்போதைய வசூல் மாஸ்டர் என்றால் அது விஜய் தான். நாளுக்கு நாள் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், விஜய்யின் படங்களுக்கு தரமான ஓப்பனிங் கிடைத்து வருகிறது. கொரோனா லாக்டவுன் முடிந்து 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே தியேட்டரில் அனுமதி என்ற நிலையிலும் கூட, மாஸ்டர் 200 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தாண்டு ஏப்ரலில் வெளியான 'பீஸ்ட்' படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தும், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் கலெக்ஷன் செய்தது.

விஜய்யின் வாரிசு பொங்கல்
பீஸ்ட் வெளியானதும் உடனடியாக வாரிசு ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, தில் ராஜூ பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்டமான தயாரிப்பாளரான தில் ராஜூ, முதன்முறை விஜய் படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வாரிசு படத்துக்காக மொத்தமாக கால்ஷீட் கொடுத்த விஜய், சொன்ன தேதிகளில் ஷூட்டிங்கையும் முடித்துவிட்டார். அதனையடுத்து வாரிசு பொங்கல் ரேஸில் களமிறங்க ரெடியாகிவிட்டது.

தளபதி வாங்கிய சம்பளம்
வாரிசு பொங்கலுக்கு வெளியாவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், தற்போது அவையெல்லாம் முடிவுக்கு வந்தன. இதனால், பொங்கல் போட்டியில் விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவும் மோதவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் இருதரப்பு ரசிகர்கள் இடையேயும் இப்போதே பரபரப்பு காணப்படுகிறது. இந்நிலையில், வாரிசு படத்திற்காக விஜய் 125 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் கோலிவுட் ஹீரோ வாங்கும் அதிகமான சம்பளம் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக பீஸ்ட் படத்துக்கு 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருந்தாராம்.

தளபதி 67ல் ஷேரிங்
பீஸ்ட் படத்தை விட வாரிசுக்கு 45 கோடி ரூபாய் கூடுதலாக விஜய் சம்பளம் வாங்கியுள்ளது கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல், விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் 'தளபதி 67' படத்திற்கு சம்பளத்திற்கு பதிலாக லாபத்தில் ஷேரிங் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், எஸ்ஜே சூர்யா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாரிசு, ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஞ்சிதமே ரஞ்சிதமே ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், செகண்ட் சிங்கிள் நாளை ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.