லண்டனில் வாரிசு FDFS எப்போன்னு தெரியுமா..? விஜய் ரசிகர்களை அலர்ட் செய்த பட நிறுவனம்
லண்டன்: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது.
வாரிசு பொங்கல் ரிலீஸை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் பேனர் வைக்கத் தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், விஜய் ரசிகர்களை அலர்ட் செய்யும் விதமாக லண்டனில் வாரிசு படத்தை வெளியிடும் பட நிறுவனம் ஒரு அப்டேட் கொடுத்துள்ளது.

களைகட்டும் வாரிசு பொங்கல் ரிலீஸ்
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சில கட்டுப்பாடுகளால், வாரிசு ரிலீஸாவதில் சிக்கல்கள் இருந்தன. ஆனால், அதன் பின்னர் வாரிசு ரிலீஸுக்கு இருந்த பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டன. இதனையடுத்து பொங்கல் ரிலீஸை கன்ஃபார்ம் செய்யும் விதமாக படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள், வாரிசு செலிப்ரேஷனை இப்போதே தொடங்கிவிட்டனர்.

தெறிக்கவிடும் சென்னை ரசிகர்கள்
பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவும் மோதவுள்ளது. இதனால், யார் வெயிட் என்ற போட்டியை இருதரப்பு ரசிகர்களும் இப்போதே தொடங்கிவிட்டனர். குறிப்பாக சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகளில் வாரிசு படத்திற்கான பிரம்மாண்டமான பேனர்களை வைத்து தெறிக்கவிடுகின்றனர் விஜய் ரசிகர்கள். சென்னை தவிர்த்து மற்ற ஊர்களிலும் விஜய் ரசிகர்கள் வாரிசு ப்ரோமோஷன் வேலைகளை காட்டத் தொடங்கிவிட்டனர்.

வாரிசு FDFS
இந்நிலையில், வாரிசு, துணிவு படங்களுக்கு சமமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், FDFS எனப்படும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கவும் ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர். வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு FDFS காட்சிகள் திரையிடப்படும் நிலையில், வாரிசு படத்துக்கு அதற்கும் முன்னதாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. வாரிசு திரைப்படத்தை இங்கிலாந்தில் வெளியிடும் அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், ஜனவரி 12ம் தேதி வாரிசு FDFS கன்ஃபார்ம் என போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதனால், லண்டனில் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். முக்கியமான விஜய்யின் வாரிசு ஜனவரி 12ம் தேதி ரிலீஸாவதும் இப்போது உறுதியாகியுள்ளது.

ஹிட் அடித்த ரஞ்சிதமே தெலுங்கு வெர்ஷன்
இதனிடையே, ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் தெலுங்கு வெர்ஷன் நேற்று வெளியானது. இந்தப் பாடல் வெளியானது முதல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழில் விஜய் குரலில் வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை, தெலுங்கில் அனுராக் குல்கர்னி பாடியுள்ளார். தெலுங்கில் விஜய்யின் குரலில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை கேட்க நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், சாங் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதேபோல், விரைவில் விரைவில் வாரிசு செகண்ட் சிங்கிள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











