விஷால் ஹீரோவா நடிக்ககூட இவ்ளோ சம்பளம் வாங்கிருக்க மாட்டாரே… அசந்து நிற்கும் கோலிவுட்

சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்கலாம் என்ற செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவரின் சம்பளம் குறித்து தாறுமாறான அப்டேட் கிடைத்துள்ளது.

மாஸ்டர் – தளபதி 67

மாஸ்டர் – தளபதி 67

விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை வெளியாகவுள்ளது. வாரிசு ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக தளபதி 67-ல் நடிக்கவுள்ளார் விஜய். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் கூட்டணி இணைவதால், படத்திற்கு இப்போது இருந்தே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மாஸ்டரில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்த நிலையில், தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஷால் – லோகேஷ் மீட்டிங்

விஷால் – லோகேஷ் மீட்டிங்

தளபதி 67ல் விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதால், அவருக்கு எதிராக வெயிட்டான வில்லனை களமிறக்க லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். அதனால் தான் விஷாலை நேரில் சந்தித்துள்ளார் லோகேஷ். இரு தினங்களுக்கு முன்னர் மார்க் ஆண்டனி சூட்டிங் ஸ்பாட் சென்றிருந்த லோகேஷ், அங்கிருந்த விஷாலை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். கேரவேனில் நடந்த சந்திப்பில் தளபதி 67 படத்தில் விஷாலின் கேரக்டர் குறித்து லோகேஷ் கூறியதாக சொல்லப்படுகிறது. லோகேஷ் - விஷால் சந்தித்துக்கொண்ட போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன.

விஷால் சம்பளம்

விஷால் சம்பளம்

விஷாலை லோகேஷ் சந்தித்துள்ளதால், அவரும் தளபதி 67ல் வில்லனாக நடிப்பது உறுதி என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே 'தளபதி 67'ல் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் நிவின் பாலி, மன்சூர் அலிகான், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது விஷாலும் இணைந்தால் இன்னும் அல்டிமேட்டாக இருக்கும். இதனிடையே தளபதி 67ல் நடிக்க விஷாலுக்கு 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. விஷால் ஹீரோவாக நடிக்கவே அதிகபட்சம் 10 முதல் 12 கோடி வரை தான் சம்பளம் வாங்குகிறார்.

வில்லனுக்கு ஜாக்பாட் தான்

வில்லனுக்கு ஜாக்பாட் தான்

விஷாலுக்கு வில்லனாக நடிக்க 20 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக வெளியான தகவலில் கோலிவுட்டே அசந்து நிற்கிறது. டாப் ஹீரோக்கள் வில்லனாக நடிக்கவே அதிகம் சம்பளம் வாங்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. விஜய் சேதுபதி கூட ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடித்தால், அதிக சம்பளம் வாங்கி வருகிறார். அதேபோல், விஷாலுக்கும் பெரிய தொகையை கொடுத்துள்ள தளபதி 67 படக்குழு, அவரது கால்ஷீட்டை மொத்தமாக வாங்கிவிட்டதாக தெரிகிறது. மார்க் ஆண்டனி படப்பிடிப்பு முடிந்ததும் டிசம்பரில் தொடங்கவுள்ள தளபதி 67 படப்பிடிப்புக்கு விஷால் வருவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X