Don't Miss!
- News
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கும்! வேல்முருகன் திட்டவட்டம்!
- Sports
கோலி தந்த ஐடியா தான் அது.. நியூசி,யின் மிடில் ஆர்டரை சுருட்டியது எப்படி?.. ஷர்துல் சுவாரஸ்ய பதில்!
- Lifestyle
கும்பத்தில் சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Technology
4 மிட்-ரேன்ஜ் போன்கள் மீது "முரட்டு" ஆபர்.. சம்பளம் போடுற நேரமா பார்த்து டெம்ப்ட் ஏத்துறாங்களே!
- Finance
ஜன.26 அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் ஓவர்.. 1ஆம் தேதி ரெடி..!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
90 வயது தாத்தா சண்டை போடுவாரா? பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்!
சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முதல் பாகத்தின் இறுதியில் தப்பித்து போன சேனாபதி மீண்டும் வந்து இந்தியாவில் நடக்கும் ஊழல்வாதிகளுக்கு மரண பயம் காட்டுவார் என தெரிகிறது.
இந்த படத்தில் சண்டை இயக்குநராக பணிபுரியும் பீட்டர் ஹெயின், 90 வயது தாத்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியான இந்தியன் படத்தில் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் வயதான தாத்தா என இரு கெட்டப்களிலும், சந்துரு என மகனாகவும் நடித்து கமலஹாசன் அசத்தியிருந்தார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் இன்றளவும் ஷங்கரின் சிறந்த படமாக விளங்குகிறது.
ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 என மூன்று பிரம்மாண்ட படங்களை ஷங்கர் கொடுத்தாலும், ஷங்கரின் ரசிகர்கள் இந்தியன் 2வையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு இளம் வயது கதாபாத்திரம் இருக்கிறதா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
கமலின் பேரன் கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்கவுள்ளதாகவும், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் என முன்னணி நடிகைகள் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், 90வயது நிரம்பிய சேனாபதி ரோலில் மீண்டும் மிரட்ட வரும் கமல்ஹாசனுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது என இந்தியன் 2 படத்தின் ஸ்டன்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் கூறியுள்ளார்.
இதில், என்ன சிக்கல் என்றால், மிகவும் பெர்ஃபெக்ஷன் பார்க்கும் கமல்ஹாசன், கையை தூக்குவது என்றால் கூட 90 வயது தாத்தா எப்படி கையை தூக்குவாரோ அப்படித்தான் தூக்குவார் என்றும், சண்டை காட்சிகளில் நம்பகத்தன்மை மிகவும் முக்கியம் என்பதால், மிக நுணுக்கமாக பார்த்து பார்த்து சேனாபதிக்கான சண்டை காட்சிகளை வைத்துள்ளதாக பீட்டர் ஹெயின் கூறியுள்ளார்.
கப்பல் ஏறி போயாச்சு பாடலில் விடுதலை பெற்று திரும்பும் சேனாபதியின் யங் கமல் போர்ஷன்களும் அங்கு அவர் சந்திக்கும் பிரச்னைகளும் கூட இந்தியன் 2வில் முக்கிய பங்காற்றும் என்றும், அந்த இடத்தில் சுகன்யாவிற்கு பதிலாக காஜல் அகர்வால் நடிப்பார் என்ற படம் குறித்த கதைகளும் இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.