'அசுரன்' தனுஷுக்கு டஃப் கொடுக்கப் போகும் நடிப்பு ராட்சசி

By Siva

Recommended Video

அசுரன் படத்தில் தனுஷுக்கு போட்டியாக மஞ்சு வாரியர்- வீடியோ

சென்னை: அசுரன் படத்தில் தனுஷுக்கு நடிப்பில் செம போட்டியாக இருக்கப் போகிறார் மஞ்சு வாரியர்.

வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை அடுத்து அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள படம் அசுரன்.

அந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார் தனுஷ்.

 மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். மஞ்சு தனுஷை விட 5 வயது பெரியவர். இந்த ஜோடி மூலம் திருமணமாகி குழந்தை பெற்றாலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி சேர முடியும் என்ற நம்பிக்கை பிற நடிகைகளுக்கு வந்துள்ளது.

ராட்சசி

ராட்சசி

தனுஷ் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் மஞ்சு வாரியரும் தனுஷ் போன்று தான். நடிப்பு ராட்சசி என்று பெயர் எடுத்தவர். அந்த அளவுக்கு அசத்தலாக நடிப்பார் அவர்.

நடிப்பு

நடிப்பு

அசுரன் படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் இடையே நடிப்பில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். தனுஷ் படம் ரிலீஸானால் அவரின் நடிப்பை பற்றி மட்டுமே அனைவரும் பேசுவார்கள். ஆனால் அசுரன் ரிலீஸானால் மஞ்சு வாரியரின் நடிப்பும் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

கோலிவுட்

கோலிவுட்

அசுரன் படம் மூலம் கோலிவுட் வருகிறார் மஞ்சு வாரியர். தனுஷுடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்று மஞ்சு தெரிவித்துள்ளார். மஞ்சுவின் கம் பேக் படமான ஹவ் ஓல்டு ஆர் யூ-வின் தமிழ் ரீமேக் தான் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X