»   »  இது நம்ம ஆளு ஆடியோ... 1.50 கோடிக்கு வித்துருச்சாமே!

இது நம்ம ஆளு ஆடியோ... 1.50 கோடிக்கு வித்துருச்சாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இது நம்ம ஆளு படத்தின் ஆடியோ உரிமை ரூ 1.50 கோடிக்கு விலை போயுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, ஆன்ட்ரியா, சூரி நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி,ராஜேந்தரின் இளைய மகனும் சிலம்பரசனின் சகோதரருமான குறளரசன் இசையமைத்துள்ளார்.


Ithu Namma Aalu audio sold out

இந்தப் ஒலிநாடா உரிமையை லகரி இசை நிறுவனம் வாங்கியுள்ளனனர்.


லகரி நிறுவனம் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் படமான ரோஜா படத்தின் ஒலி நாடா உரிமையை வாங்கினர். இளையராஜாவின் தளபதி இசை இவர்கள் வெளியீடுதான்.


தற்போது குறளரசனின் முதல் படமான இது நம்ம ஆளு படத்தின் ஒலிநாடா உரிமையை (தமிழ்,தெலுங்கு) வாங்கியுள்ளனர். தமிழ் தெலுங்கு இரண்டும் சேர்த்து ரூபாய் ஒரு கோடி ஐம்பது லட்சமாம்.


இது நம்ம ஆளு படத்தின் பாடல்கள் சிலம்பரசனின் பிறந்த தினமான பிப்ரவரி 3ஆம் தேதி முதல் வெளியாகவிருக்கிறது.

English summary
Simbu Cine Arts says that its Simbu starrer Ithu Namma Aalu audio rights sold out for Rs 1.5 cr to Lahari.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil