»   »  கங்கிராட்ஸ் "கண்டம்"!... இந்தப் படத்துக்குத்தான் 2015ம் ஆண்டின் முதல் யு சான்றிதழ்!!

கங்கிராட்ஸ் "கண்டம்"!... இந்தப் படத்துக்குத்தான் 2015ம் ஆண்டின் முதல் யு சான்றிதழ்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகர் தீபக் நாயகனாக அறிமுகமாகும் இவனுக்கு தண்ணில கண்டம் படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் அளித்துள்ளது.

வி.வி.ஆர். சினிமாஸ்க் என்ற நிறுவனத்தின் சார்பில் வி.வெங்கட்ராஜ் தயாரித்திருக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்'. இப்படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், சின்னத்திரை நடிகருமான தீபக் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் நேஹா நடிக்கிறார்.

இவர்களுடன் பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், சென்ட்ராயன், ‘நான் கடவுள்' ராஜேந்திரன் மற்றும் சண்டி ஆகியோர் நடித்து உள்ளனர்.

புதிய இசைக்குழு...

புதிய இசைக்குழு...

கானா பாலா, யுகபாரதி மற்றும் கண்ணன் பாடல்களை எழுத, இப்படத்தின் மூலம் A7 என்ற புதிய இசைக் குழுவினர் இசை அமைப்பாளர்களாக அறிமுகமாகியிருக்கிறார்கள். ஆர்.வெங்கடேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சின்னபாப்பா, பெரிய பாப்பா இயக்குநர்...

சின்னபாப்பா, பெரிய பாப்பா இயக்குநர்...

சின்னத்திரையில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா' போன்ற பல நகைச்சுவை தொடர்களை இயக்கி வெற்றி இயக்குநராக வலம் வந்த எஸ்.என்.சக்திவேல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

யு சான்றிதழ்...

யு சான்றிதழ்...

2015-ம் ஆண்டில் முதல் படமாக சென்சார் செய்யப்பட்ட இந்தப் படத்திற்கு ‘யு' சான்றிதழ் தரப்பட்டுள்ளது.

பெருமை...

பெருமை...

இப்படம் தொடர்பாக அதன் தயாரிப்பாளர் வெங்கட்ராஜ் கூறுகையில், ‘ 2015-ம் ஆண்டின் முதல் சென்சார் படமே எங்களுடைய நிறுவனத்தின் படம் என்பதில் மிகப் பெருமையடைகிறோம். அதைவிட பெருமை, இந்தப் படத்திற்கு ‘யு' சர்டிபிகேட் கிடைத்திருப்பதுதான்.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

எங்களுடைய முதல் படமே அனைவரின் பாராட்டையும் பெற்றிருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். எங்களது படத்தை நம்பி வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் இதைக் கேட்டு சந்தோஷமடைந்துள்ளனர்.

பிப்ரவரி ரிலீஸ்...

பிப்ரவரி ரிலீஸ்...

இவனுக்கு தண்ணில கண்டம் படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வரும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.

English summary
Ivanuku Thannila Gandam is a Tamil film directed by S N Shaktevel. Deepak plays the TV host whose life changes after a night party. The film went to the censors and has received an U certificate from the Censor Board.
Please Wait while comments are loading...