»   »  பிரபுதேவாவின் ‘டூ இன் ஒன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜாக்கிசான்!

பிரபுதேவாவின் ‘டூ இன் ஒன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜாக்கிசான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் வெளியிட்டுள்ளார்.

நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் எனப் பன்முகத் திறமையாளரான பிரபுதேவா, தற்போது விஜய் இயக்கத்தில் புதிய படமொன்றை தயாரித்து நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது.

பேய்ப்படம்...

பேய்ப்படம்...

திகில் படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிரபுதேவா, தமன்னா நாயகன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் அமலா, சோனுசூட், எமிஜாக்சன் மற்றும் ஃபராக் கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

செப்டம்பர் ரிலீஸ்...

செப்டம்பர் ரிலீஸ்...

மூன்று மொழிகளுக்கும் தனித்தனி இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். தமிழில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வரும் செப்டம்பர் 9ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது.

2 இன் 1 போஸ்டர்...

2 இன் 1 போஸ்டர்...

இந்நிலையில் இப்படத்தின் 2-இன் - 1 போஸ்டரை ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், பாலிவுட் நடிகர் சோனுசூட் உடன் சேர்ந்து வெளியிட்டுள்ளார். பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் ஆகியோர் உள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜாக்கிசான்...

ஜாக்கிசான்...

சோனு சூட் குங்பூ யோகா படத்தில் ஜாக்கிசானுடன் நடித்து வருகிறார். அந்த நட்பின் அடிப்படையில் இந்தப் போஸ்டரை ஜாக்கிசான் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தசாவதாரம்...

தசாவதாரம்...

இதற்கு முன்னர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார் ஜாக்கிசான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The first look poster of the Hindi version titled 2 in 1, was released by global cinema icon Jackie Chan along with Bollywood actor Sonu Sood, who plays an important role in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil