»   »  வசூலில் 'தி லெஜன்ட் ஆப் டார்சானை' வீழ்த்தியது ஜாக்சன் துரை!

வசூலில் 'தி லெஜன்ட் ஆப் டார்சானை' வீழ்த்தியது ஜாக்சன் துரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹாலிவுட் படங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை பாக்ஸ் ஆபீஸில் தற்போது அந்த சூழ்நிலை மாறியிருக்கிறது.

கடந்த வாரம் அப்பா, ஜாக்சன் துரை, பைசா, ஒரு மெல்லிய கோடு, வில்லாதி வீரப்பன் என 5 நேரடித் தமிழ்ப்படங்களும், 'தி லெஜன்ட் ஆப் டார்சான்', 'தி பர்ஜ் எலெக்ஷன் இயர்', 'தி பிஎப்ஜி' என 3 ஹாலிவுட் படங்களும் வெளியாகின.


இதில் ஹாலிவுட் படங்களை பின்னுக்குத்தள்ளி தமிழ்ப்படமான 'ஜாக்சன் துரை' பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. மேற்சொன்ன படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை இங்கே பார்க்கலாம்.


ஜாக்சன் துரை

ஜாக்சன் துரை

சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'ஜாக்சன் துரை' 77.34 லட்சங்களை வசூலித்து, முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் சென்னையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த ஹாலிவுட் படங்கள் வசூலை இப்படம் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.


தி லெஜன்ட் ஆப் டார்சான்

தி லெஜன்ட் ஆப் டார்சான்

66.71 லட்சங்களுடன் இப்படம் 2 வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 'மெட்ரோ' 54.62 லட்சங்களுடன் 3 வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது. 2 வாரத்திலும் 'மெட்ரோ' வசூலைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


அப்பா

அப்பா

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'அப்பா' 18.05 லட்சங்களுடன் 4 இடத்தைக் கைப்பற்றியுள்ளது. ஊடங்கள் மற்றும் ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்கள் இப்படத்தின் வசூலுக்கு பெரிதும் உதவி செய்துள்ளன.


ஒரு மெல்லிய கோடு

ஒரு மெல்லிய கோடு

அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஒரு மெல்லிய கோடு' 5.64 லட்சங்களையும், ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' 3.78 லட்சங்களையும் வசூல் செய்துள்ளன.


'வில்லாதி வில்லன் வீரப்பன்', 'பைசா' ஆகிய 2 படங்களும் பாக்ஸ் ஆபீஸில் கவனம் பெறவில்லை.English summary
Jackson Durai Beats The Legend of Tarzan in Chennai Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil