Don't Miss!
- News
"அதிமுகவின் தற்போதைய நிலைக்கு டெல்லி தான் காரணம்" டிடிவி தினகரன் ஓபன் டாக்!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
ஜெய்பீம் அடுத்த இலக்கு....#PIFF2022 போட்டியில் நுழைந்தது...
ஜெய்பீம் திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி சாதனைப்படைத்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் படம் பார்த்தோரை கவர்ந்தது. சூர்யாவின் ரசிகர்களை தாண்டி படம் அனைவரையும் சென்றடைந்தது. ஆஸ்கர் விருதுக்கும் தேர்வானது, ஆனால் நாமினேஷனில் தேர்வாகவில்லை. தற்போது இப்படம் #PIFF2022 போட்டியில் நுழைந்துள்ளது.
அனிதாவிடம் டபுள் மீனிங்கில் பேசிய பாலா.. கடுப்பாகும் பிக் பாஸ் ரசிகர்கள்.. கமல் கண்டிப்பாரா?

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய ஜெய்பீம்
ஒரு படமோ, நாவலோ அதை பார்த்தவர், படித்தவர் மனதில் அதற்கு பின்னரும் அழுத்தத்தை ஏற்படுத்தினால் அது சிறந்த படைப்பு எனலாம். அப்படிப்பட்ட அழுத்தத்தை ஏற்படுத்திய படம் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம். அதற்கு காரணம் படம் உண்மைச் சமபவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதும், படம் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் தான். படம் வெளியான சூழ்நிலையில் அரசியலளவில் வாதத்தையும் கிளப்பியது.

நிஜத்தில் வாழும் கதாநாயகர்கள்
படத்தின் கதாபாத்திரங்கள் இன்றளவும் நிஜத்தில் வாழ்வது இப்படத்தின் வெற்றிக்கும் படம் பேசப்படுவதற்குமான முக்கிய காரணம் ஆகும். படத்தின் காட்சி அமைப்பு, திரைக்கதை, சூர்யா உள்ளிட்ட பாத்திரங்கள் அமைக்கப்பட்ட விதம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆஸ்கருக்கு தேர்வான ஜெய்பீம்
ஜெய்பீம் படத்தின் கதை அமைப்பு படம் எடுக்கப்பட்ட விதம் காரணமாக ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி சென்றது. ஆனால் நாமினேஷன் லிஸ்ட்டில் படம் வரவில்லை. ஆஸ்கருக்கு என்று சில நடைமுறைகள் உள்ளன. படத்தில் சித்தரிக்கப்படும் காட்சிகள், ஜூரிகளை படக்குழு அணுகும் விதம் என பல நடைமுறைகள் காரணமாக நாமினேஷனுக்கு படம் அனுப்பப்படவில்லை என்கிற கருத்து எழுந்தது. ஆனால் ஜெய்பீமுக்கு என்ட் கார்டு இல்லை என்பதுபோல் தற்போது புனே இண்டர்னேஷன்ல் பிலிம் பெஸ்டிவலுக்கு தேர்வாகியுள்ளது. இது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PIFF2022 விருது நிகழ்ச்சி
புனே இண்டர்நேஷனல் பிலிம் ஃபெச்டிவெல் என்பது மஹாராஷ்டிராவில் புனே நகரில் இயங்குகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் மஹாராஷ்டிர அரசு மராத்தி படமான சாந்த் துக்காராம் சிறந்த படத்துக்கான விருதை வழங்கி வருகிறது. இது தவிர 12 பல்வேறு தலைப்புகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான நடைமுறை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தொடங்கும்.

இயக்குநர் வசந்த், எஸ்.பி.பி க்கு விருது
இதற்காக படத்தை திரையிடுவது, விவாதிப்பது என பல நடைமுறைகள் இருக்கும். PIFF விருதுகளில் மெச்சத்தகுந்த கலைஞர்கள் விருது இதுவரை தென் இந்தியாவைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை. அதேபோல் இந்த விருதுக்கான போட்டியில் இதுவரை கமர்ஷியல் தமிழ் படங்கள் சென்றதில்லை. இந்த விருதில் ஆர்.டி.பர்மன் இசை விருதை 2012 ஆம் ஆண்டு இளையராஜாவும், 2018 ஆம் ஆண்டு மறைந்த எஸ்.பி.பியும் பெற்றுள்ளனர். தமிழ் படங்களில் சிவரஞ்சனியும் இரண்டு பெண்களும் என்கிற படத்துக்கு விருது கிடைத்துள்ளது. இந்தப்படம் கேளடி கண்மணி படத்தை இயக்கிய இயக்குநர் வசந்த் இயக்கிய படம் ஆகும்.

வெல்லுமா ஜெய்பீம்
சர்வதேச, இந்திய அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் மோதும் விருது நிகழ்வில் முதன் முறையாக இந்த விழாவில் தமிழ்படம் ஜெய்பீம் தேர்வாகியுள்ளது. அற்புதமான திரைக்கதை, காட்சி அமைப்பு, வசனம் மூலம் கவர்ந்த ஜெய்பீம் படம் மக்கள் மனதை மட்டுமல்ல விருது வழங்கும் ஜூரிகளின் மனதையும் கவர்ந்து பரிசை வெல்லும் என்று ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு பூர்த்தியடையும் என தெரிகிறது.