Don't Miss!
- Education
NAAN MUDHALVAN SHORT FILM FESTIVAL 2023:குறும்பட திருவிழா போட்டியில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்...!
- News
தூய்மை பணியாளர்களுக்கு விருந்து! எல்லோருக்கும் பிரியாணி பரிமாறிவிட்டு ரசம் ஊற்றி சாப்பிட்ட ஆ.ராசா!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
சிலுவை ஷேப்பில் உள்ளாடை.. சர்ச்சையை கிளப்பிய ஜெயிலர் ஹீரோயின் தமன்னா.. டிரெண்டாகும் பிக்ஸ்!
சென்னை: நடிகை தமன்னா ஃபர்ஸ்ட் லுக் ஃபேஷன் மேகஸினுக்காக வித்தியாசமான உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள நிலையில், அது சிலுவை போல உள்ளதாக நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் பிசியான நடிகையாக கலக்கி வருகிறார் நடிகை தமன்னா. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ள தமன்னா தற்போது வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட் உடன் அவர் கொடுத்துள்ள போஸை பார்த்து காதலர் விஜய் வர்மா போட்டுள்ள கமெண்ட்டும் ரசிகர்கள் கவனத்தை அதிகமாக கவர்ந்துள்ளது.
ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையும் தமன்னா.. உறுதிப்படுத்திய சன் பிக்சர்ஸ்!

ஜெயிலர் ஹீரோயின்
தமிழ் சினிமாவில் கடைசியாக அஜித்தின் வீரம் படத்தில் முன்னணி நடிகையாக நடித்த தமன்னா தெலுங்கில் பாகுபலி, சைரா நரசிம்ம ரெட்டி என நடித்து வந்தார். விஷால் உடன் இணைந்து அவர் நடித்த ஆக்ஷன் திரைப்படம் ஃபிளாப் ஆன நிலையில், கோலிவுட்டில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் தமன்னா தான் ஹீரோயின் என சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

சீனியர் நடிகர்களுடன்
தமிழில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கமிட் ஆகி உள்ள நடிகை தமன்னா தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியின் போலா சங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். அஜித்தின் வேதாளம் தெலுங்கு ரீமேக்கான அந்த படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவை தொடர்ந்து ஸ்ருதிஹாசன், தமன்னா என பல முன்னணி நடிகைகளும் சீனியர் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகின்றனர்.

சிலுவை ஷேப்பில் உள்ளாடை
அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், செம குஷியில் இருக்கும் நடிகை தமன்னா ஃபர்ஸ்ட் லுக் மேகஸினுக்காக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிகப்பு நிறத்தில் சிலுவை ஷேப்பில் உள்ள உள்ளாடையுடன் நடிகை தமன்னா போஸ் கொடுத்து இருப்பது நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

உள்ள ஒண்ணுமே போடல
சிலுவை ஷேப் உள்ளாடை அணிந்தது மட்டுமின்றி உள்ளாடையே அணியாமலும் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார் ஜெயிலர் பட நாயகி தமன்னா. சோஷியல் மீடியா முழுவதும் தற்போது அவரது லேட்டஸ்ட் வீடியோவின் ஸ்க்ரீன் ஷாட்கள் தான் டிரெண்டாகி வருகின்றன.

காதலர் கமெண்ட்
புத்தாண்டை முன்னிட்டு நடிகை தமன்னாவுக்கு லிப் கிஸ் அடித்து மாட்டிக் கொண்ட காதலரும் நடிகருமான விஜய் வர்மா தமன்னாவின் இன்ஸ்டா பதிவுக்கு உடனடியாக ஃபயர் எமோஜியை பதிவிட்டு இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கூடிய சீக்கிரமே அடுத்த கிராண்ட் வெட்டிங் ஓடிடியில் வெளியாக ரெடியாகி விடும் போல என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.