»   »  இதயம் நொறுங்கிவிட்டது, இது சத்யாகிரகம்: ஸ்ரீதிவ்யா, அனிருத்#Jallikattu

இதயம் நொறுங்கிவிட்டது, இது சத்யாகிரகம்: ஸ்ரீதிவ்யா, அனிருத்#Jallikattu

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் அமைதிப் புரட்சி நடந்து வருகிறது. கலாச்சாரத்தை காக்க தமிழக இளைஞர்கள் நடத்தி வரும் அறவழிப் போராட்டம் நம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு திரையுலகினரும் ஆதரவு தெரிவித்து நாளை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்ரீதிவ்யா

நடிகை ஸ்ரீதிவ்யா ஜல்லிக்கட்டு குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அடுத்தவர்களின் கலாச்சாரத்தை எடுத்துக் கொள்ள முயற்சி செய்பவர்களை பார்த்து இதயம் நொறுங்கிவிட்டது. நான் ஜல்லிக்கட்டை ஆதிரக்கிறேன். #JusticeforJallikattu #ISupportJallikattu

விஜய் சேதுபதி

திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதை ட்விட்டரில் அறிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

அனிருத்

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் நடக்கும் அறவழிப் போராட்டத்தை பார்க்கும்போது சத்யாகிரகம் நினைவுக்கு வருவதாகக் கூறி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

குஷ்பு

நடிகை குஷ்புவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தினமும் ட்வீட்டி வருகிறார். இது அவர் ரீட்வீட் செய்தது.

English summary
Actress Sridivya, music director Anirudh have expressed their support for Jallikattu. This silent protest of youngsters reminded Anirudh of Satyagraha movement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil