Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர்..முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!
சென்னை : அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2009ம் ஆண்டு வெளியான அவதார் படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து படம் வெளியானாலும், அதே பிரமிப்பு, அதே பூரிப்பு ஏற்படுகிறது.ஜேக் சுலி மற்றும் நைத்ரிஸ்கை மக்களிடம் இருந்து தங்கள் குழந்தைகளை காக்க போராடுகிறார்.

அவதார் 2 : தி வே ஆஃப் வாட்டர்
அவதார் 2 : தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்னும் அந்த விஷூவல் மயக்கத்தில் இருந்து மீண்டு வரவில்லை. ஒரு மணிநேரம் இடைவிடாமல் நீருக்கடியில் இருக்கும் காட்சி பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது. கதை, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் உள்ளன. தியேட்டருக்குள் நுழைந்த மூன்று மணிநேரம் ஏதோ வேறு ஒரு உலகத்திற்கு சென்று வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது என படத்தை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

துல்லியமான சவுண்ட் எஃபெக்டை
இப்படத்தின் கதை முழுக்க முழுக்க தண்ணீருக்கு அடியில் நடப்பதால், படத்திற்காக பிரத்யேக படகுகள், கப்பல்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. 3டி, 4K மற்றும் 48 Frames Per Second என்ற மூன்று தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய இந்த படத்தை அதற்கு ஏற்ப கிரிஸ்டல் க்ளியரான பிரைட்னஸாக விஷூவல், ஐ மேக்ஸ் தரக்கூடிய ஸ்பீக்கர்கள் படத்தின் துல்லியமான சவுண்ட் எஃபெக்டை திரையரங்கை அலறவிட்டது.

பல புதுமைகள்
அவதாராக மனிதர்களே நடித்திருந்தாலும், அது ஒரு இடத்தில் கூட தெரியாத அளவிற்கு மிகவும் ஒவ்வொரு காட்சிக்காக மெனக்கெட்டு இருக்கிறார். புதுப்புது மிருகங்கள், புது இன நாவி மக்கள் என நிறைய இந்த பாகத்தில் நிறைய புதுமைகளை புகுத்தி கைத்தட்டலை பெற்றுள்ளார் ஜேம்ஸ் கேமரூன். கடலில் துப்பாக்கியுடன் மனிதர்களும், அம்புடன் நாவி மக்களும் சண்டையிடும் காட்சிகளின் கிராஃபிக்ஸ் காட்சி படம் பார்த்தவர்களை வாயடைக்க வைத்துவிட்டது.

முதல் நாள் வசூல்
அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர் 160 மொழிகளில் நேற்று வெளியான நிலையில், முதல் நாள் படம் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. இப்படம் வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் அதிக வசூலாகி உள்ளது. தமிழ்நாட்டில் 3 முதல் 5 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 8 முதல் 10 கோடியும், கர்நாடகாவில் 4 முதல் 6 கோடியும், கேரளாவில் 2 முதல் 2.5 கோடியும் வசூலாகி உள்ளது.

வசூல் குறைவுதான்
இந்திய அளவில் 32 கோடி முதல் 39 கோடி வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் அவதார் இந்தியாவில் 100 கோடி வசூலித்தது, எனவே அதன் இரண்டாம் பாகத்திற்கு அதைவிட இருமடங்கு வசூல் இருக்கும் என்று எதிர்த்த நிலையில், முதல் நாளில் வசூல் குறைவுதான் என விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.