Don't Miss!
- News
ட்விஸ்ட்.. அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்யனும்.. ஓபிஎஸ்சும் இருக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்
- Sports
"கோலியின் நடுவிரல் முதல்.. ஹர்பஜனின் தடை வரை" பார்டர் கவாஸ்கர் கோப்பை ஏன் முக்கியம்?.. 5 சர்ச்சைகள்
- Finance
பிட்ச் கொடுத்த அப்டேட்.. சற்றே நிம்மதியடைந்த அதானி.. ஏன் தெரியுமா?
- Automobiles
பெட்ரோலும் வேணாம் பேட்டரியும் வேணாம் பச்ச தண்ணீல ஓடும் எலெக்ட்ரிக் கார்... ரேஞ்ச் எவ்வளவு தெரியுமா?
- Lifestyle
உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பாலியல் அடிமைத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறார்களாம்... உஷார்!
- Technology
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- Travel
இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரிலீசுக்கு முன்பே கலெக்ஷனை தட்டித்தூக்கிய அவதார் 2.. எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை : அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 16ந் தேதி வெளியாக உள்ள நிலையில், முன் பதிவுக்கான டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.
ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தை கொடுக்கும் வகையில் புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவதார் படத்தை ஜேம்ஸ் கேமரூன் உருவாக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் உருவாக இருப்பதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.
அவதார் 2 தமிழில் வெளியாவதில் திடீர் சிக்கல்… அதிருப்தியில் ஹாலிவுட் ரசிகர்கள்!

ஜேம்ஸ் கேமரூன்
டைட்டானிக், தி டெர்மினேட்டர் மற்றும் டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே போன்ற பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை தயாரித்த கனேடிய திரைப்பட தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் 1500 கோடி ரூபாய் அளவில் அவதார் திரைப்படத்தை இயக்கி இருந்தார். தனி உலகத்தில் வாழும் அவதார்களை கண்காணிக்க அனுப்பப்படும் ஹீரோ அவர்கள் இடத்தை ஆக்கிரமிப்பதை எதிர்த்து அவதார்களுடன் சேர்ந்து வெல்வதே கதை.

அவதார்
இப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் மற்றும் சிறந்த விஷுவல் எஃபெக்ட்களுக்கான மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றது மட்டுமில்லாமல், அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி மெய் சிலிர்க்க வைத்தது.

முன்னணி நடிகர்கள்
அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படத்தில், டைட்டானிக் படத்தில் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் என பலரும் அதில் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 160 மொழிகளில் டிசம்பர் மாதம் 16ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

5 பாகங்கள்
இந்த படத்தின் டீசர் கடந்த மே மாதம் வெளியாகி 24 மணி நேரத்தில் 148 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. கிராபிக்ஸ் காட்சிகள் இவை என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் 5 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. அவதார் தொடரின் மூன்றாவது படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என்றும், நான்காவது பாகம் 2026ம் ஆண்டு, ஐந்தாம் பாகம் 2028ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனை படைத்தது
இந்நிலையில், அவதார் 2 திரைப்படத்திற்காக முன்பதிவு அசுரவேகத்தில் தொடங்கி டிக்கெட்டுகள் விற்பனையாகி விற்றுத் தீர்ந்துள்ளன. தற்போது வரை ரூ.10 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முன்பதிவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை
அவதார் 2 திரைப்படம் மோஷன் பிக்சரில் சிறந்த இயக்குனர் பிரிவில் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆஸ்கருக்கு நிகரான உயரிய விருதான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா வருகிற ஜனவரி மாதம் 10-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.