For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலாஜியை வெளியேற்றுங்கள்.. அல்லது ஏ சர்ட்டிஃபிகேட் கொடுங்கள்.. பிரபல இசையமைப்பாளர் ஆவேசம்!

  |

  சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாலாஜியை வெளியேற்ற வேண்டும் அல்லது ஏ சர்ட்டிஃபிகேட் கொடுக்க வேண்டும் என பிரபல இசையமைப்பாளர் கூறியுள்ளார்.

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி சக போட்டியாளரான ஆரியிடம் மரியாதைக் குறைவாக பேசுவதும் அடிப்பது போல் மிரட்டலாக நடந்து கொள்வதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  குட்டி நயனின் பேபி டால் பிக்ஸ்... பனிக்கு நடுவே ஏஞ்சல் என வர்ணித்த ரசிகர்கள்!

  கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் கொஞ்சம் கூட கண்ணியமே இல்லாமல் நடந்து கொள்கின்றனர். சக போட்டியாளர்களின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்கப்படுவதில்லை.

  வயதில் மூத்தவர் ஆரி

  வயதில் மூத்தவர் ஆரி

  இது சுரேஷ் சக்கரவர்த்தி முதல் ஆரி வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக பாலாஜியின் நடவடிக்கையால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ள போட்டியாளர்களில் வயதில் மூத்தவராக இருப்பவர் ஆரி.

  ஷிவானியிடம் புலம்பல்

  ஷிவானியிடம் புலம்பல்

  அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பதை ஃபீரிஸ் டாஸ்க்கின் போது உள்ளே வந்த ஹவுஸ்மேட்ஸ் குடும்பத்தினர் மூலம் அறிந்து கொண்டார் பாலாஜி. இதனால் அவர் கப்பு வாங்குவதை மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று ஷிவானியிடம் கூறினார்.

  மரியாதை கெட்டுடும்

  மரியாதை கெட்டுடும்

  இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியை அடிப்பது போது மிரட்டிய பாலாஜி, இனிமே வேற மாதிரி ஆயிடும் என்று எச்சரித்தார். மேலும் மரியாதை கெட்டுடும், நீ ஒரு பேக்கு என்றும் கன்னா பின்னாவென பேசி கைகளை முறுக்கினார் பாலாஜி.

  நிதானத்தை இழந்து

  நிதானத்தை இழந்து

  ஒரு கட்டத்தில் மொத்த நிதானத்தையும் இழந்த பாலாஜி, மைக்கை கழட்டி அடித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பாலாஜியை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  குழந்தைகளை அனுமதிக்ககூடாது

  குழந்தைகளை அனுமதிக்ககூடாது

  இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாலாஜி போன்ற பிளேயர் உள்ளே இருக்கும் போது, இந்த நிகழ்ச்சியை குழந்தைகளை பார்க்க அனுமதிக்கக்கூடாது. பாஸ்ஸிகுமார் உள்ளே இருந்த போதே இதை நான் கூறினேன் என்று பதிவிட்டுள்ளார்.

  வயது வந்தவர்களுக்கு மட்டும்

  வயது வந்தவர்களுக்கு மட்டும்

  தனது மற்றொரு பதிவில், கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடிக்கடி இது பல்வேறு வயதினரும் பார்க்கிற ஷோ என்கிறார். அது உண்மை என்றால், பாலாஜி வெளியே அனுப்பப்பட வேண்டும். அல்லது இந்த நிகழ்ச்சிக்கு 'A' சர்ட்டிஃபிகேட் கொடுத்து, 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று தெளிவாக நிர்ணயம் செய்யவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

  குகை மனிதர்கள் சண்டை

  குகை மனிதர்கள் சண்டை

  தொடர்ந்து, நிகழ்ச்சி வாய்மொழி வன்முறையால் நிறைந்துள்ளது. ஆமாம், முந்தைய எபிசோடுகள் மற்றும் முந்தைய பருவங்களில் கூச்சல்கள் மற்றும் அலறல்கள் இருந்தன, ஆனால் 1 ஜனவரி, 2020 எபிசோட் எல்லா எல்லைகளையும் தாண்டியது, நாங்கள் கண்டது பேலியோலிதிக் யுகத்தில் குகை மனிதர்கள் சண்டை போடுவதை போல் உள்ளது. இது நரமாமிச நடத்தை.

  மனைவியிடம் கூறினேன்

  மனைவியிடம் கூறினேன்

  இது தனிநபர்களின் நல்வாழ்வுக்கு - பொதுவான பார்வையாளர்களுக்கு முற்றிலும் அச்சுறுத்தலாக இருந்தது. இது அறிவாற்றல் சிதைவுகளை ஏற்படுத்துவது உறுதி. முழு நிகழ்வும் என்னை மிகவும் தொந்தரவு செய்ததாகவும், அடுத்த நிமிடமே பல்வேறு நபர்களிடமிருந்து அதே கருத்துக்களைக் கண்டேன் என்றும் நான் என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

   குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு

  குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு

  நிச்சயமாக, ஒருவருக்கு பார்ப்பதைத் தவிர்ப்பதற்கான விருப்பம் உள்ளது, ஆனால் இதுபோன்ற விஷயங்களை எந்த தடையும் இல்லாமல் ஒளிபரப்ப முடியும் என்று அர்த்தமல்ல.

  எத்தனை குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இந்த உளவியல் போரைப் பார்க்க அனுமதிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது, இது அவர்களின் தனிப்பட்ட பாதிப்பு காரணிகளைக் குழப்பியிருக்கும்.

  பார்வையாளர்களின் பிரச்சனை

  பார்வையாளர்களின் பிரச்சனை

  கடவுளுக்கு நன்றி நான் அதைக் கண்டேன், இல்லையென்றால் யாராவது என்னிடம் சொன்னால் நான் நம்பாமல் இருந்திருப்பேன். இது நிரந்தரமாக உரையாற்றப்படுவதை நாம் காண வேண்டும், இதனால் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பார்வையாளர்களின் மனதில் ஏற்படும் பாதிப்பு சரியான முறையில் தீர்க்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

  English summary
  James Vansanthan wants Balaji Should be send out by Kamal. Otherwise, they have to announce Bigg boss as Adult program.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X