twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸில் ஓவராகும் கட்டிப்பிடி.. அது ஒரு திருட்டு வக்கிர சுகம்.. விளாசும் பிரபல இசையமைப்பாளர்!

    |

    சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிப்பது கொஞ்சம் ஓவராகத்தான் உள்ளது என பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் விளாசியுள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் ஒன்று முதலே ஆண் போட்டியாளர்கள் சக பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடிப்பது தொடர் கதையாகி வருகிறது. முதல் சீசனில் பெண் போட்டியாளர்களை கண்ட மேனிக்கு கட்டிப்பிடித்த சினேகனை ரசிகர்கள் அளவே இல்லாமல் இப்போதும் விளாசி வருகின்றனர்.

    இப்போது வரை யார் சக பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடித்தாலும் குட்டி சினேகன் என்றே கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகும் மூன்றாவது சீசனில் ரியோ அதே வேலையை செய்வதாக கூறுகின்றனர் ரசிகர்கள்.

    இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? தொடர்ந்து சாதிக்கும் அல்லு அர்ஜுனின் 'புட்ட பொம்மா' ரசிகர்கள் வாழ்த்து! இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? தொடர்ந்து சாதிக்கும் அல்லு அர்ஜுனின் 'புட்ட பொம்மா' ரசிகர்கள் வாழ்த்து!

    கட்டிப்புடி வைத்தியர்

    கட்டிப்புடி வைத்தியர்

    என்ன நடந்தாலும் சரி சக பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடித்து விடுகிறார் ரியோ. இதற்காக அவரை குட்டி சினேகன் என்றும் கட்டிப்புடி வைத்தியர் என்றும் அழைத்து வருகின்றனர் ரசிகர்கள்.

    ஜேம்ஸ் வசந்தன் விளாசல்

    ஜேம்ஸ் வசந்தன் விளாசல்

    இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அதிகரிக்கும் இந்த கட்டிப்பிடி கலாச்சாரத்தை நாசுக்காக விளாசியிருக்கிறார் பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன். பிக்பாஸ் வீட்டில் யாரெல்லாம் வக்கிரத்தோடு கட்டிப்பிடிக்கிறார்கள், யார் சகோதரிகளிடம் நடந்து கொள்வதைபோல் இங்கிதத்துடன் நடந்த கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    ஆண் பெண் அணைப்பு

    இப்போ நான் பேசப்போறது ஒரு delicate-ஆன விஷயம். இருந்தாலும் பலர் மனசில் இது இருக்குறதுனால, இதைப்பற்றி பலர் கிண்டலாகவும் பேசுறதுனால நான் அதை எழுதுறேன்.
    போட்டியாளர்கள் தங்கள் அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒருவரையொருவர் அணைத்துக் கொள்வது பற்றி. ஆண்-பெண் அணைப்பைப் பற்றிதான்!

    இதில் ஒன்றும் தவறில்லை

    இதில் ஒன்றும் தவறில்லை

    நான் வளர்ந்ததும் இந்தக் கலாச்சாரத்தில்தான்! அதீத அன்பு, பாசம், மகிழ்ச்சி, பெருமிதம், உற்சாகம், நீண்ட நாள் பிரிவு என பல காரணங்களுக்கு நம்மையறியாமல் நாம் நம்மிடம் நெருங்கிப் பழகுபவர்களிடம் வெளிப்படுத்தும் ஒரு உடல்மொழி. இதில் ஒன்றும் தவறில்லை.

    ஒரு வரைமுறை இருந்தது

    ஒரு வரைமுறை இருந்தது

    என் அம்மா எங்கள் சின்ன வயதில் எங்களிடம் சொல்லியது நினைவிருக்கிறது. அக்காவானாலும், ஒரு வயதுக்குப் பிறகு தொட்டுப் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பார். அது பழையகாலத்துப் பண்பாடு என்று புரிந்துகொண்டாலும், அதில் ஒரு வரைமுறை இருந்தது என்பதை இப்போது விளங்கிக்கொள்கிறேன்.

    ஒரு லாவகம் வேண்டும்

    ஒரு லாவகம் வேண்டும்

    ஒரு ஆண் பெண்ணை அணைக்கும்போது ஒரு வரையறையுடன் அணைப்பது நாகரிகம். ஒரு வளர்ந்த ஆண், ஒரு பெண்ணை அணைக்கும்போது ஒரு லாவகம் வேண்டும். நேராக மார்போடு மார்பாக இறுக்கி அணைப்பது முறையல்ல. காதலி, மனைவியைத் தவிர.. அல்லது அதை அவளும் விரும்புகிறாள் எனும் பட்சத்தைத் தவிர.

    ஒரு திருட்டு வக்கிர சுகம்

    ஒரு திருட்டு வக்கிர சுகம்

    பிக்பாஸ் வீட்டில் இது கொஞ்சம் ஓவராகத்தான் நடந்தது/நடக்கிறது. சிலருக்குக் கொஞ்சம்கூட இங்கிதம் இல்லை. நாம் பொதுவாக நல்லவர்கள்தான் என்றாலும் எல்லாருக்குள்ளும் வக்கிரமும் ஒளிந்திருக்கும். கூடலாம் குறையலாம், ஆனால் இருக்கும். இதைப்போன்ற அணைப்புகளில் ஒரு திருட்டு வக்கிர சுகம், ஆழ்மனதின் ரசிப்பும் இருக்க வாய்ப்புண்டு.

    உடனே கண்டுகொள்வார்கள்

    உடனே கண்டுகொள்வார்கள்

    இதைப்போன்ற சூழ்நிலைகளில் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். பெண்களிடம் கேட்டுப்பாருங்கள். தவறான உள்நோக்கத்துடன் அணைப்பவர்களை அவர்கள் உடனே கண்டுகொள்வார்கள். அந்த அணைப்பில் அது தெரிந்துவிடும். அதை விரும்புவதோ, தவிர்ப்பதோ ஒவ்வொருவரின் இஷ்டம்.

    Recommended Video

    YAARADI NEE MOHINI SERIAL FAME SHREE NEW MOVIE POOJA | FILMIBEAT TAMIL
    தீர்மானித்துக் கொள்ளுங்கள்

    தீர்மானித்துக் கொள்ளுங்கள்

    இப்போது இந்த நிகழ்ச்சியின் எல்லாப் பழைய எபிசோட்களையும் போட்டு ஒவ்வொருவரின் நடத்தையையும் பாருங்கள். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதில் ஆரி எப்போதோ ஒருமுறை சிலரை அணைத்த விதத்தையும் பாருங்கள்! இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    English summary
    James Vasanthan has shared a post about Biggboss house hugging culture. He says Some people enjoys hugging female contestants in the house. At same time he supports Aari for his gentleman behaving.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X