Param Sundari Day 2 Box Office: ஜான்வி கபூரின் பரம் சுந்தரி.. வசூலில் எந்த லெவல்ல இருக்கு தெரியுமா?
மும்பை: சித்தாந்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் இணைந்து நடித்த 'பரம் சுந்தரி' படம், ரிலீஸ்க்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரிலீஸ்க்குப் பின்னர் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். இப்படி இருக்கும்போது படத்தின் வசூல் நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
படம் ரிலீஸ் ஆன நாளில் ரசிகர்கள் பலரும் படம் சுமார் என்று கூறினார்கள். சில விமர்சகர்களும் கூட படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்தார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தனித் தனி காட்சிகளாக நன்றாக உள்ளது, ஆனால் படத்தின் திரைக்கதையில் அது ஒட்டவில்லை. அதே நேரத்தில் படத்தின் பின்னணி இசை மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

பரம் சுந்தரி: கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 29 அன்று வெளியான இந்தப் படம், முதல் நாளில் ரூ. 7.25 கோடியை வசூலித்ததாக சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. இரண்டாவது நாளிலும் படம் முதல் நாளைப் போல நல்ல வசூல் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் முதல் நாளை விட இரண்டாவது நாளில் படம் ரூபாய் 9 கோடிகள் வசூல் செய்துள்ளது என்றும் சாக் நிக் வலைதளம் குறிப்பிட்டுள்ளது. படத்திற்கு இன்று அதாவது ஆகஸ்ட் 31 ஆம் தேதி வார இறுதி நாளில் அதிக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இதுவரை நடைபெற்றுள்ள புக்கிங்கைக் கணக்கில் கொண்டால் படம் நேற்றைய வசூலை விடவும் சற்று கூடுதலாக வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

வசூல் நிலவரம்: மொத்தத்தில் படம் முதல் இரண்டு நாட்களில் ரூபாய் 16.5 கோடிகள் வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த வசூல் கணக்கு என்பது இந்தியாவில்தான். வெளிநாட்டு வசூலைக் கணக்கில் கொண்டால் படத்தின் வசூல் கிட்டத்தட்ட ரூபாய் 20 கோடிகளில் இருந்து ரூபாய் 25 கோடிகள் வரை வசூலாகி இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











