'இப்படியே போனா அவ்ளோதான்...' - பெரிய வெற்றி இல்லாமல் தொடங்கி இருக்கும் ஜனவரி!

By Vignesh Selvaraj

Recommended Video

ஜனவரி மாத தமிழ் சினிமா டல்லடிக்கத் தொடங்கியிருக்கிறது...வீடியோ

சென்னை : பொங்கல் ரிலீஸ் படங்களுக்குப் பிறகு, பெரிய படங்கள் எதுவும் வெளிவராமல் தமிழ் சினிமா டல்லடிக்கத் தொடங்கியிருக்கிறது.

நாளை மறுநாள் வரும் 26ம் தேதியில் 'நிமிர்', 'மன்னர் வகையறா' ஆகிய நேரடித் தமிழ்ப் படங்களும், அனுஷ்காவின் 'பாகமதி' டப்பிங் படமும் வெளியாக உள்ளது.

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', விஷாலின் 'இரும்புத்திரை' ஆகிய படங்கள் தள்ளிப்போயிருப்பது தான் ஜனவரி மாதத்தை பரபரப்பில்லாமல் கடக்க வைத்திருக்கிறது.

ஜனவரி ரிலீஸ்

ஜனவரி ரிலீஸ்

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் பொங்கல் வெளியீடுகள் என்றாலே திரையுலகத்தில் ஒரு பரபரப்பிருக்கும். அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் அப்போது வெளியாகும் படங்கள் பெரிய வசூலைப் பெற வாய்ப்புகள் அதிகம். இந்த வருடப் பொங்கலுக்கு மூன்று படங்கள்தான் வெளிவந்தன.

ஓரளவு வசூல்

ஓரளவு வசூல்

'தானா சேர்ந்த கூட்டம்', 'ஸ்கெட்ச், 'குலேபகாவலி' ஆகிய மூன்று படங்கள் வெளிவந்தாலும் மூன்று படங்களுமே பிரம்மாண்ட வெற்றியைப் பெறவில்லை. அந்த மூன்றில் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் மட்டுமே ஓரளவு வசூலைக் கொடுத்திருக்கிறது.

ஜனவரி 26 ரிலீஸ்

ஜனவரி 26 ரிலீஸ்

பொங்கலுக்கு அடுத்து ஜனவரி மாதத்தில் குடியரசு தினமான 26-ம் தேதியன்று, பொங்கலுக்கு வெளிவர இயலாத படங்கள் வெளிவரும். நாளை மறுநாள் வரும் 26-ம் தேதியில் 'நிமிர்', 'மன்னர் வகையறா' ஆகிய இரண்டு நேரடித் தமிழ்ப் படங்களும், 'பாகமதி' டப்பிங் படமும் வெளியாக உள்ளது. இந்த மூன்று படங்களுமே பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை.

மன்னர் வகையறா

மன்னர் வகையறா

உதயநிதியின் 'நிமிர்' படம் மலையாளத்தில் வெற்றியும், வரவேற்பையும் பெற்ற 'மகேஷின்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக் என்பதுதான் படத்தின் பிளஸ் பாயின்ட். விமல் நடிக்கும் 'மன்னர் வகையறா' படம் நகைச்சுவையில் ரசிக்க வைக்கும் என்பது படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு.

பத்மாவத்

பத்மாவத்

'பாகமதி' திரைப்படம் 'பாகுபலி 2'க்குப் பிறகு வரும் அனுஷ்கா படம் என்பதால் வரவேற்பு இருக்கிறது. நாளை தீபிகா படுகோனே நடிக்கும் 'பத்மாவத்' திரைப்படம் வெளிவருகிறது. பலத்த சர்ச்சைகளுக்கு இடையே வெளிவருவதால் இந்தப் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

சில படங்கள் தள்ளிவைப்பு

சில படங்கள் தள்ளிவைப்பு

விஷாலின் 'இரும்புத்திரை', ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' ஆகிய படங்கள் தள்ளிப் போயிருக்கின்றன. இதனால், இந்த ஜனவரி மாதத்தை பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி எந்த வெற்றியும் இல்லாமல் கடக்கப்போகிறது தமிழ் சினிமா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X