»   »  ஏ ஆர் ரஹ்மானுக்கு ஜப்பானில் கிடைத்த தமிழ் வரவேற்பு!

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஜப்பானில் கிடைத்த தமிழ் வரவேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜப்பான் நாட்டுக்குச் சென்ற ஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழில் வரவேற்பு அளித்தார் ஒரு மாணவி.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் யோகோபோடியா அமைப்பால் வழங்கப்படும், ஃபுகுவோகா விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இசைத்துறையில் சிறந்து விளங்குவதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

Japan student gives Tamil reception to A R Rahman

இந்த விருதைப் பெறுவதற்காக ஃபுகுவோகாவுக்குச் சென்றார் ரஹ்மான். அங்கு இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் அவரை வரவேற்றார்கள். ஒரு மாணவி தமிழில் எழுதப்பட்ட பலகை கொண்டு அவரை வரவேற்றார்.

ரஹ்மான் அவர்களே வருக வருக, எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கிற வாசகங்களை உடைய அட்டைகளைக் கொண்டு ரஹ்மானை வரவேற்றார். இதன் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் ரஹ்மான்!

English summary
A Japan student has gave Tamil reception to A R Rahman at Fukuoka.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X