»   »  உ.பி. திரைப்பட வளர்ச்சி வாரிய துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகை ஜெயப்பிரதா நீக்கம்

உ.பி. திரைப்பட வளர்ச்சி வாரிய துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகை ஜெயப்பிரதா நீக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநில திரைப்பட வளர்ச்சி வாரிய துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகை ஜெயப்பிரதா நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநில திரைப்பட வளர்ச்சி வாரிய துணைத் தலைவராக பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நியமிக்கப்பட்டார்.

Jaya Prada loses the plump post in UP Film Development Council

சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் இருந்து இரண்டு முறை எம்.பி.யாக தேர்வானவர் ஜெயப்பிரதா. சமாஜ்வாடி கட்சியில் இருந்து அமர் சிங்கும், ஜெயப்பிரதாவும் கடந்த 2010ம் ஆண்டு நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் அண்மையில் அமர் சிங் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் கட்சியில் சேர்ந்த பிறகு ஜெயப்பிரதாவுக்கு இந்த துணைத் தலைவர் பதவி கிடைத்தது.

இந்த நிலையில் மாநில திரைப்பட வளர்ச்சி வாரிய துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகை ஜெயப்பிரதாவை முதல்வர் அகிலேஷ் யாதவ் நீக்கியுள்ளார். முக்கிய பொறுப்புகளில் உள்ள அமர் சிங்கின் ஆதரவாளர்கள் மேலும் சிலரும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

English summary
Bollywood actor Jaya Prada has been sacked as the vice-chairperson of the UP Film Development Council on sunday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil