பாராட்டு மழையில் ராஜராஜ சோழன்.. அருள்மொழிவர்மனை கொண்டாடும் ஜெயம் ரவி ரசிகர்கள்!

சென்னை: மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற பலரும் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இப்படம் வெளியாகிய நாள் முதல் இன்று வரை தரமான வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த பல பிரபலங்களும் படத்தை பாராட்டி புகழ்ந்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கோர் செய்த பிரபலங்கள்

கோர் செய்த பிரபலங்கள்

பல முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் இயக்க நினைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் மணிரத்தினம். இப்படத்தில் முதல் பாதி முழுவதும் நடிகர் கார்த்தி ஸ்கோர் செய்ய, இரண்டாம் பாதியில் முழுவதும் ஜெயம் ரவி ஸ்கோர் செய்துள்ளார்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றுள்ள குந்தவை மற்றும் நந்தினி கதாபாத்திரங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் இப்படத்தை புகழ்ந்து பாராட்டி தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தங்களது விருப்பமான நடிகர்களின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

70 ஆண்டு கனவு

70 ஆண்டு கனவு

அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 70 ஆண்டுகளாக படமாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த இந்த வரலாற்றுக் கதையை மணிரத்தினம் வெற்றிகரமாக இயக்கி அனைவரின் பார்வைக்கும் கொண்டு வந்துள்ளார் என்று கூறியும், மன்னனாக ஆட்சி செய்யும் அருள்மொழிவர்மனையும் புகழ்ந்து வருகின்றனர்.

பாராட்டு மழையில் ஜெயம் ரவி

பாராட்டு மழையில் ஜெயம் ரவி

பல ஹிட் படங்களை கொடுத்துள்ள நடிகர் ஜெயம் ரவிக்கு இந்த படம் தனி அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. சாக்லேட் பாயாகவும், ஹண்ட்சம் ஹீரோவாகவும் இருந்து வந்த நடிகர் ஜெயம் ரவிக்கு இந்த கதாபாத்திரம் எப்படி சரியாக இருக்கும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அனைவரையும் ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியுள்ளார் நடிகர் ஜெயம்ரவி. படத்தில் நடித்த அனைவரையும் கொண்டாடி வரும் நிலையில் ராஜராஜ சோழனாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி என்று இவரை இவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X