அதுக்குள்ள ஷுட்டிங் முடிச்சுட்டாங்களா...அசத்தல் அப்டேட்டுடன் வந்த ஜெயம் ரவியின் அகிலன்

சென்னை : ஜெயம் ரவி நடித்த அகிலன் படத்தின் ஷுட்டிங் பற்றிய அசத்தல் அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளனர் படக்குழுவினர். இப்படி ஒரு அப்டேட்டை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டாரே டைரக்டர் என கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

2018 ம் ஆண்டு பாக்சிகை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜெயம் ரவியின் பூலோகம் படத்தை இயக்கிய டைரக்டர் கல்யாண் கிருஷ்ணன், ஜெயம் ரவிவை வைத்து மீண்டும் இயக்கி உள்ள படம் அகிலன். பிரியா பவானிசங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சிரக் ஜானி, ஹரீஷ் பரதி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

சத்தமில்லாமல் வந்த அப்டேட்

சத்தமில்லாமல் வந்த அப்டேட்

அகிலன் படத்தின் ஷுட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டது. அதற்கு பிறகு அப்டேட் ஏதும் வெளியிடாமல் இருந்த படக்குழு, சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டரை வெளியிட்டனர். இதில் ஜெயம் ரவி, கடற்படை அதிகாரியாக நடித்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது. அதற்கு பிறகு சத்தமே இல்லாமல் இருந்த படக்குழு, இன்று காலை 10.10 மணிக்கு அப்டேட் வெளியிட போவதாக அறிவித்தனர்.

என்னது ஷுட்டிங்கே முடிஞ்சுடுச்சா

என்னது ஷுட்டிங்கே முடிஞ்சுடுச்சா

இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அப்படி என்ன அப்டேட்டாக இருக்கும் என கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் யாரும் கொஞ்சும் எதிர்பாராத வகையில், படத்தின் ஷுட்டிங் முடிவடைந்து விட்டதாகவும், டீசர் ஜுன் மாதம் வெளியிடப்பட உள்ளதாகவும் க்ளிம்ப்ஸ் உடன் அப்டேட் வெளியிட்டனர். இதை பார்த்த ரசிகர்கள், என்னது அதுக்குள்ள ஷுட்டிங்கையே முடிச்சுடிங்களா என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

பட்டையை கிளப்பும் கிளிம்ப்ஸ்

பட்டையை கிளப்பும் கிளிம்ப்ஸ்

படத்தின் மேக்கிங் வீடியோவையே கிளிம்ப்சாக வெளியிட்டு அசத்தி உள்ளனர். படத்தில் பிரியா பவானிசங்கர் போலீஸ் ரோலில் நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் துறைமுகத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. King Of Indian Ocean என்ற வாசகத்துடன் அகிலன் பட கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்கள் என்பது உறுதியாகி உள்ளது.

இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி

இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி

இந்த கிளிம்ப்ஸ் படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கடற்படை அதிகாரி, சென்னை லோக்கல் ரவுடி என இரு ரோல்களில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது. ஜெயம் ரவி அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படமும் செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X