»   »  ஒரே ஒரு மெகா வெற்றி... சத்தமின்றி முதல் வரிசைக்கு வந்த ஜெயம் ரவி!

ஒரே ஒரு மெகா வெற்றி... சத்தமின்றி முதல் வரிசைக்கு வந்த ஜெயம் ரவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் என்ற மெகா வெற்றிப் படம் கொடுத்த பிறகு ஜெயம் ரவியின் பாக்ஸ் ஆபீஸ் மதிப்பு மளமளவென்று உயர்ந்துவிட்டது.

இன்றைக்கு அஜீத், விஜய்க்கு அடுத்த நிலையில் ஜெயம் ரவிதான் இருக்கிறார். அடுத்து ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தால் அவர்களையும் தாண்டிப் போய்விடுவார் என்ற நிலை.


ஆறு படங்கள்

ஆறு படங்கள்

இன்றைக்கு அவர் கையில் ஆறு படங்கள். ஆறுமே முக்கிய படங்கள். இவற்றை முன்னணி இயக்குநர்கள் மற்றும் அவர் அண்ணன் மோகன் ராஜா ஆகியோர் இயக்குகிறார்கள்.


மிருதன்

மிருதன்

இந்த ஆறு படங்களில் முதலில் வரப்போவது 'மிருதன்'. இதில், அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கி வருகிறார். படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்கிறார்கள்.


பிரபுதேவா தயாரிப்பில்

பிரபுதேவா தயாரிப்பில்

இதைத்தொடர்ந்து, 'ரோமியோ ஜூலியட்' படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். பிரபுதேவா, ஐசரி கணேஷ் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.


கவுதம் மேனன்

கவுதம் மேனன்

அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கிறார் ஜெயம் ரவி. இது விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லராம்.


சுசீந்திரன்

சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கும் ஒரு படத்திலும், விஜய் இயக்கும் ஒரு புதிய படத்திலும் ஜெயம் ரவி நடிக்க சம்மதித்துள்ளாராம்.


மீண்டும் மோகன் ராஜா

மீண்டும் மோகன் ராஜா

இந்த இரு படங்களுக்கு முன், தன் அண்ணன் மோகன் ராஜா படத்தில் மீண்டும் நடிக்கப் போகிறாராம் ரவி. மற்ற படங்களின் வெற்றியைப் பொறுத்து மோகன் ராஜா படம் முன்னே பின்னே ஆகலாம் என்கிறார்கள்.


English summary
After the mega hit of Thani Oruvan, Jayam Ravi is signing 6 new movies including Miruthan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil