»   »  தொண்டன்: மீண்டும் இணையும் 'நிமிர்ந்து நில்' கூட்டணி?

தொண்டன்: மீண்டும் இணையும் 'நிமிர்ந்து நில்' கூட்டணி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போகும் புதிய படத்திற்கு 'தொண்டன்' என்று பெயர் வைத்திருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர் ஹிட்களால் ஜெயம் ரவியின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. தற்போது போகன் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி அடுத்து ஏ.எல்.விஜய், சுசீந்திரன், கவுதம் மேனன், மோகன் ராஜா, சக்தி சவுந்தர் ராஜன் ஆகியோரின் படங்களில் நடிக்கவிருக்கிறார்.

Jayam Ravi Team up with Samuthirakani

இந்நிலையில் சமுத்திரக்கனி இயக்கப் போகும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இப்படத்திற்கு தொண்டன் என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான 'நிமிர்ந்து நில்' லஞ்சம் நமது சமுதாயங்களில் எப்படி புரையோடிப் போயிருக்கிறது என்பதை ஆழமாக எடுத்துக் கூறியது.

வணிக ரீதியாக தோல்வியைத் தழுவினாலும் தமிழ் சினிமாவின் சிறந்த முயற்சி என இப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணைவது சினிமா ஆர்வலர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said jayam Ravi Team Up with Samuthirakani for his Upcoming Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil