»   »  மொட்ட சிவா கெட்ட சிவாவுக்கு இணைத் தயாரிப்பாளரான ஜீவா!

மொட்ட சிவா கெட்ட சிவாவுக்கு இணைத் தயாரிப்பாளரான ஜீவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க வேந்தர் மூவீஸ் மதன் உலகம் முழுவதும் வெளியிடும் படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். முக்கிய பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் அஸ்வத் தோஸ் ராணா, கோவைசரளா, மதன் பாப், தம்பி ராமைய்யா, சதீஷ், கும்கி அஸ்வின், சுகன்யா, தேவதர்ஷினி, பாண்டு, மயில்சாமி, மனோபாலா, மகாநதி சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், ஸ்ரீமன், சாம்ஸ், வி.டி.வி.கணேஷ், காக்கா முட்டை ரமேஷ், சரண்தீப், வம்சி, பாவா லட்சுமணன், சரத், ஜி.வி.குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.


@Actorjiiva

சர்வேஸ் முராரி ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசை அமைக்கிறார். ஜான் மகேந்திரன் வசனம் எழுதுகிறார்.


இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளராக ஜீவா பணியாற்றுகிறார். ஏற்கெனவே விஜய் நடித்த ஜில்லா படத்திலும் இணைத் தயாரிப்பாளராக இருந்தார் ஜீவா. அவருடன் பி சுரேஷ், பி ஜீவன், ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் படத்துக்கு இணைத் தயாரிப்பாளராகியுள்ளனர்.


மொட்ட சிவா கெட்ட சிவா தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற பட்டாஸ் படத்தின் ரீமேக். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.


படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இரண்டு பாடல்களை வெளிநாடுகளில் படமாக்க உள்ளனர். ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படமாகும்.

English summary
Actor Jiiva is playing the role of co producer for Raghava Lawrence starring Motta Siva Ketta Siva. --

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil