twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்பு அட்ராசிட்டீஸ்: முடியலைனா பதவி விலகிடுங்க: விஷாலுக்கு ஜீவா பொளேர்

    By Siva
    |

    Recommended Video

    அன்பு அட்ராசிட்டீஸ்: முடியலைனா பதவி விலகிடுங்க: விஷாலுக்கு ஜீவா பொளேர்- வீடியோ

    சென்னை: அன்புச்செழியனின் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் சங்க தலைமைகள் நிர்வாக திறமை இல்லை என்றால் விலகிவிடுமாறு நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

    பைனான்ஸியர் அன்புச்செழியனின் அடாவடியால் சசிகுமாரின் உறவினரான அசோக் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது மரணத்திற்கு காரணம் அன்புச்செழியன் என்று தெளிவாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலோ அன்புச்செழியன் பெயரைக் கூட குறிப்பிடாமல் பேசுகிறார்.

    தைரியம்

    தைரியம்

    இயக்குனர் சுசீந்திரன் தான் தைரியமாக முன்வந்து அன்புச்செழியன் செய்த கொடுமைகளை எல்லாம் விளக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் அன்புவின் வீட்டில் ஐடி ரெய்டு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    பணம்

    பணம்

    தமிழ் சினிமாவில் இடைத்தரகர்களும், பைனான்சியர்களும், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே சம்பாதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
    ஒரு திரைபடத்தை விற்பனைசெய்து வெளிக் கொண்டுவர எந்த ஒரு அடிப்படை கட்டமைப்பும் இதுவரை இங்கு இல்லை என்று நடிகர் ஜீவா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

    தலைமை

    தலைமை

    நலிந்த கலைஞர்களை, தயாரிப்பாளர்களை, தொழிலாளர்களை காப்பாற்றுவோம் என்று சங்கங்கள் சொல்வது மட்டும் பயனில்லை, கலைஞர்களோ, தயாரிப்பாளர்களோ, தொழிலாளர்களோ நலிவடையாமல் பாதுகாக்க வேண்டியது அந்தந்த சங்க தலைமைகளின் கடமை. நிர்வாக திறமை இல்லை என்றால் பதவிகளைவிட்டு விலகிவிடுங்கள்...!! என்கிறார் ஜீவா.

    அன்பு

    அன்பு

    திரையுலகினரை ஆட்டிப்படைக்கும் அன்புச்செழியன் பற்றி விஷால் எப்படி பேசுவார். அன்பு தான் விஷாலின் பல பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளாரே என்று கூறி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

    ஆதரவு

    ஆதரவு

    யாரும் அன்புச்செழியனுக்கு எதிராக பேசாத நிலையில் துணிந்து பேசிய சுசீந்திரனுக்கு ஆதரவு கிடைக்குமா இல்லை அவரையும் முடக்கிவிடுவார்களா என்று ரசிகர்கள் அஞ்சுகிறார்கள்.

    English summary
    Actor Jeeva has asked the heads of some councils to step down if they can't handle their duties.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X