»   »  சினிமா உலகை உலுக்கிய 'சய்ரத்' இந்தி ரீமேக் டைட்டில் இதுதான்.. -ரிலீஸ் தேதியை அறிவித்தார் கரண் ஜோகர்!

சினிமா உலகை உலுக்கிய 'சய்ரத்' இந்தி ரீமேக் டைட்டில் இதுதான்.. -ரிலீஸ் தேதியை அறிவித்தார் கரண் ஜோகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : மராத்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'சய்ரத்'. 'ஃபாண்ட்ரி' படத்தின் மூலம் கவனம் பெற்ற நாகராஜ் மஞ்சுலே இயக்கிய இந்தப் படம் நாடு முழுவதும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. கரண் ஜோகர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சசாங் கைத்தான் இயக்குகிறார். இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக களமிறங்க, ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கத்தார் ஹீரோவாக நடிக்கிறார்.

Jhanvi's debut: Karan Johar makes an important announcement

சய்ரத் படத்தின் இந்தி ரீமேக்கிற்கு தற்போது தலைப்பு முடிவாகி உள்ளது. அதன்படி படத்திற்கு 'ததாக்' என்று பெயரிட்டுள்ளனர். ததாக் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் கரண் ஜோகர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 'ததாக்' படம் வரும் 2018 ஜூலை 6-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

English summary
Hindi remake of 'Sairat' film is renamed as 'Dhadak'. Karan johar producing this film, which was lead by Sridevi's daughter Janhvi kapoor and ishan kaththaar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil