»   »  ஜிகினா வண்ணமயம்... ட்விட்டரில் புகழும் ரசிகர்கள்

ஜிகினா வண்ணமயம்... ட்விட்டரில் புகழும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் வசந்த் - சானியா தாரா நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் ஜிகினா திரைப்படம் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்று இருக்கிறது.

இயக்குநர் ரவி நந்தா பெரியசாமி இயக்கியிருக்கும் இந்தப் படமானது சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் பேக் ஐடி பயன்படுத்துவதையும், அதன் விளைவுகளையும் எடுத்துக் கூறும் விதமாக அமைந்திருக்கிறது.


வேறு எந்த பெரிய நடிகர்களின் படங்களும் வெளிவராத சூழ்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ஜிகினா, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.


ஜிகினா படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர், அவற்றின் தொகுப்பை கீழே காணலாம்.


உணர்ச்சிப்பூர்வமான முடிவு

பல நாட்கள் கழித்து ஒரு உணர்ச்சிப்பூர்வமான கிளைமாக்ஸ் பார்த்த மகிழ்ச்சியை அனைவரின் முகங்களிலும் பார்க்க முடிகிறது என்று பதிவிட்டிருக்கிறார் கவியரசன்.


தாழ்வு மனப்பான்மை

இயக்குநர் நந்தா பெரியசாமி நாம் கருப்பாக இருக்கிறோம் என்று தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிப்பவர்களைப் பற்றி, உரக்க எடுத்துக் கூறியிருக்கிறார். சமூக வலைதளங்களில் பேக் ஐடிகள் பற்றிக் கூறும் இந்தப் படத்தை பார்க்கலாம் என்று ராஜசேகர் கூறியிருக்கிறார்.


சமூகத்திற்கு அழுத்தமான செய்தி

ஜிகினா படத்தின் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு அழுத்தமான செய்தியை எடுத்துக் கூறியிருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி, இரண்டாம் பாதியில் வரும் சில அழகான காட்சிகள் மற்றும் படத்தின் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று படத்தை லைக்கிட்டு இருக்கிறார் மீரான்.


ட்ரெண்டிற்கு ஏற்ற ஜிகினா

சமூகத்தின் ட்ரெண்டைப் பிரதிபலித்திருக்கும் ஜிகினா, இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு படம்தான் கவினின் பதிவிது.


ஜிகினா - வண்ணமயம்

படம் முழுவதும் பெயருக்கு ஏற்றவாறு வண்ணமயமாகவே உள்ளது, பேஸ்புக்கில் பேக் ஐடி வைத்திருப்பவர்களின் கறுப்புப் பக்கங்களை படம் எடுத்துக் கூறியிருக்கிறது என்று விக்கி ஜிகினாவை பற்றிக் கூறியிருக்கிறார்.


மொத்தத்தில் ஜிகினா ட்ரெண்ட்டிற்கு ஏற்ற படமாக மாறியிருக்கிறது.....English summary
Vijay Vasanth Starring Jigina - Fans Twitter Comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil