»   »  போக்கிரி ராஜா படத்திற்காக ராஜஸ்தான் பாணி அரங்கில் ஜீவா-ஹன்சிகா நடனம்!

போக்கிரி ராஜா படத்திற்காக ராஜஸ்தான் பாணி அரங்கில் ஜீவா-ஹன்சிகா நடனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

போக்கிரி ராஜா படத்துக்காக ராஜஸ்தான் பாணியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் ஜீவா - ஹன்சிகா ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்திருக்கும் படம் போக்கிரி ராஜா. இது ஜீவாவிற்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' புகழ் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.


Jiiva - Hansika shake legs for Pokkiri Raja

பிடிஎஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், பிடி செல்வக்குமார் வழங்க, டிஎஸ் பொன்செல்வி தயாரித்துள்ளார். டி இமான் இசையமைத்துள்ளார்.


இப்படத்தின் ஒரு பாடலுக்கு பூந்தமல்லி அருகில் ராஜஸ்தான் கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கமைப்பில் 100 நடனக் கலைஞர்கள் மற்றும் ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்க நடன இயக்குநர் பிருந்தாவின் நடன இயக்கத்தில் ஜீவா மற்றும் ஹன்சிகா இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்த ராட்சி படமானது.


இப்பாடல் 'பப்ளி பப்ளி (Bubbly Bubbly)' என்று தொடங்குவதால் அரங்கத்தில் ஜீவா ஹன்சிகாவை செல்லமாக 'பப்ளி பப்ளி' என்று கிண்டல் செய்து கொண்டே இருந்தாராம் (பப்ளிசிட்டி பப்ளிசிட்டி!).


இப்படத்தின் டீஸரை யுட்யூபில் இன்றுமுதல் காணலாம்.

English summary
Jiiva - Hansika starring Pokkiriu Raaja trailer will be released from today night in Youtube.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil