»   »  ஜிமிக்கி கம்மல் ஃபீவர் இன்னும் போகலையா? - இதோ அக்மார்க் தமிழ் வெர்சன்!

ஜிமிக்கி கம்மல் ஃபீவர் இன்னும் போகலையா? - இதோ அக்மார்க் தமிழ் வெர்சன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'ப்ரேமம்' படத்துக்குப் பிறகு தமிழ்நாட்டு இளைஞர்கள் கொண்டாடும் மலையாள வரவு 'ஜிமிக்கி கம்மல்' பாடல்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இந்த 'ஜிமிக்கி கம்மல்'.

இந்தப் பாடல் கேரள மக்கள் தாண்டி பெரும்பாலானோருக்கும் பிடித்திருந்தது. இந்தப் படத்தைப் ப்ரொமோட் செய்வதற்காக 'ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச்' ஒன்று தொடங்கப்பட்டது.

ஜிமிக்கி கம்மல் ட்ரெண்ட் :

ஜிமிக்கி கம்மல் ட்ரெண்ட் :

'ஜிமிக்கி கம்மல்' சேலஞ்சின் மூலம்தான் இந்தப் பாடல் செம ஹிட் ஆனது. தமிழ், மலையாள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது 'ஜிமிக்கி கம்மல்'. அந்தப் பாடலுக்கு ஆடிய ஆசிரியை ஷெரிலுக்கு தமிழிலும், மலையாளத்திலும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது.

ஷெரில் ட்ரெண்ட் :

ஷெரில் ட்ரெண்ட் :

கேரளாவின் ஒரு கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி யூ-ட்யூபில் பதிவேற்றிய வீடியோ பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அந்த வீடியோவில் ஆடிய ஆசிரியை ஷெரில் இதன்மூலம் பிரபலமானார்.

ஜிமிக்கி கம்மல் ரீமிக்ஸ் :

ஜிமிக்கி கம்மல் ரீமிக்ஸ் :

ஜிமிக்கி கம்மல் சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்ட் ஆகியதால், அந்தப் பாடலின் வரிகளுக்கு பலரும் நடனமாடி வீடியோக்களைப் பதிவேற்றினர். எம்.ஜி.ஆர், கவுண்டமணி, செந்தில் வடிவேலு தொடங்கி விஷால் வரை இந்தப் பாடலுக்கு ஆடினால் எப்படி இருக்கும் என வீடியோக்களைப் பகிர்ந்து வந்தனர்.

தமிழ் வெர்சன் :

ஜிமிக்கி கம்மல் ட்ரெண்ட் ஓரளவு நிறைவுற்ற நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சில இளம்பெண்களும், இளைஞர்களும் இணைந்து ஜிமிக்கி கம்மல் பாடலின் தமிழ் வரிகளை உருவாக்கி அதற்கேற்ப ஆடிப் பாடியிருக்கிறார்கள். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Read more about: tamil, தமிழ்
English summary
After the movie 'Premam', Tamil youths were celebrated in Malayalam's 'Jimikki Kammal'. Now, the tamil version of 'jimikki kammal' song made by tamil youths.

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil